25th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.11.2024) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் / மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள 'விழுதுகள்' ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார்.
- அதன்படி, உரிமைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமையப் பெறவுள்ள 273 ஒருங்கிணைந்த சேவை மையங்களில் முதலாவது மையமாக சென்னை, சோழிங்கநல்லூர், கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
- புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கே, ஃபிஜி துணைப் பிரதமர் திரு மனோவா காமிகாமிகா, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவுக்கான ஐ.நா.வின் உள்ளுறை ஒருங்கிணைப்பாளர் திரு ஷோம்பி ஷார்ப், சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் (ஐசிஏ) தலைவர் திரு ஏரியல் குவார்கோ பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள், ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024- ல் கலந்து கொண்டவர்களை வரவேற்றார்.
- மாநாட்டின் கருப்பொருள், "கூட்டுறவு அனைவருக்கும் செழிப்பை உருவாக்குகிறது" என்பதாகும். இந்திய அரசின் தொலைநோக்குக் கொள்கையான கூட்டுறவின் மூலம் வளம் (சஹ்கார் சே சம்ரித்தி) என்பதற்கு ஏற்ப இது அமைந்துள்ளது.
- டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி 6-4, 6-2 என்ற செட்களில் நெதர்லாந்தின் வான் டெ ஜாண்ட்ஷுல்பினை வீழ்த்தினார். இவர் காலிறுதியில் ரஃபேல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மற்றுமொரு இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீரரான யானிக் சின்னா் நெதர்லாந்தின் டாலோன் கிரீஸ்பூக்கரை 7-6(2), 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார். கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதா்லாந்து இந்தக் கட்டத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும்.
- கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அடுத்தடுத்து டேவிஸ் கோப்பை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை மொத்தம் 3 முறை (1976, 2023, 2024) இத்தாலி அணி கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.