24th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள் - பாகிஸ்தான் அரசு நாணயம் வெளியீடு
- குருநானக்கின் 555-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவரது பிறந்த இடமான பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனம் ஆஸ்தான் நான்கானா சாஹிப்பில் கடந்த நவம்பா் 14-ஆம் தேதி தொடங்கியது.
- இந்த குருத்வாராவில் நடைபெறும் மதச் சடங்குகளில் கலந்துகொள்ள இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள ஏராளமான சீக்கியா்கள் யாத்திரை மேற்கொண்டனா்.
- நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில், தற்போது இந்தியா திரும்பும் சுமாா் 2,500 இந்தியா்களை அந்நாட்டின் முதல் சீக்கிய அமைச்சரும், பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்த குழுத் தலைவருமான ரமேஷ் சிங் அரோரா வழியனுப்பி வருகிறாா்.
- இந்த நிகழ்வை முன்னிட்டு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ. 55 சிறப்பு நினைவு நாணயத்தை அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
- நாணயத்தின் ஒரு பக்கம் குருத்வாரா ஜனம் அஸ்தான் நான்கானா சாஹிப் கல்வெட்டுகளும், மறுபுறம் பிறை மற்றும் நட்சத்திரத்துடன் உருது மொழியில் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
- இந்த நாணயம் 79% பித்தளை, 20% துத்தநாகம் மற்றும் 1% நிக்கல் ஆகியவற்றால் ஆனது. 30 மி.மீ. விட்டமும், 13.5 கிராம் எடையும் கொண்டது.
- இலங்கையில் முந்தைய ரணில் விக்ரமசிங்கே அரசு தீவிர பொருளாதார திவால்நிலையை எதிர்கொண்டதால் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியின் கடன் உதவியை நாடியது.
- இந்நிலையில் அங்கு நடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்றது. அதிபராக அனுரகுமார திசநாயக தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று புதிய அதிபர் அறிவித்திருந்தார்.
- இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் குழு சமீபத்தில் மதிப்பாய்வை முடித்து சென்றது. இதனை தொடர்ந்து இலங்கைக்கு 4வது தவணையாக 3பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.25330கோடி) தொகையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்து.