22nd NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.11.2024) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முழுவதும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக 18.18 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார்.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிபவர்கள் சர்வதேச தொழில் சந்தையில் போட்டியிட அவர்களின் உற்பத்தி திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவிற்குள் நுழைய வழி வகை செய்யவும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் சுமார் 100 கோடி ரூபாயில் மெகா கிளஸ்டர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
- தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அரசாணையில், "காலநிலை மாற்றத்தின் காரணமாக, மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்த சிக்கல்களை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையத்தை அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் இந்த மையத்திற்கு தலைமை வகிப்பார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. முதல் தவணையாக ரூ.448.29 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியான 5949 கிராம பஞ்சாயத்துகளுக்கும் பொருந்தும்.
- மத்திய அரசு, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவு துறை) மூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு மானியத்தை விடுவிக்க பரிந்துரை செய்கிறது.
- ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்கள் பரிந்துரைக்கப்பட்டு ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் விடுவிக்கப்படுகின்றன.