17th NOVEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நைஜீரியாவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி
- ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவின் அதிபா் போலா அகமது தைனுபு அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு இருநாள்கள் பயணமாக சென்றுள்ளாா் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 17 ஆண்டுகளில், இந்திய பிரதமா் ஒருவா் நைஜீரியாவுக்கு சென்றது இதுவே முதல்முறையாகும்.
- நைஜீரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (ஜிசிஓஎன்)’ விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
- இதன்மூலம், சர்வதேச அளவில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு பின், இந்த உயரிய விருதை பெறும் உலகத் தலைவர் என்ற பெருமை மோடியைச் சேர உள்ளது.
- முன்னதாக, கடந்த 55 ஆண்டுகளுக்கு முன், 1969-இல் ராணி எலிசபெத்துக்கு ஜிசிஓஎன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி பெறும் 17-ஆவது சர்வதேச விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- நைஜீரியாவை தொடா்ந்து, பிரேஸிலில் இரு நாள்களும் (நவ. 18, 19), கயானாவில் மூன்று நாள்களும் (நவ.19-21) அவா் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.
- டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, நெடுந்தொலைவு சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதித்து வருகின்றது.
- நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணையின் விமான சோதனை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படையின் மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் விமான சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது.
- 14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்து வந்தது. சனிக்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் ஹரியாணா - ஒடிஸா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிஸா அணி ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் ஒடிஸா 5-1 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.