நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் / NADAPPOM NALAM PERUVOM THITTAM
TNPSCSHOUTERSOctober 04, 2024
0
நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் / NADAPPOM NALAM PERUVOM THITTAM: இதய நோய் பாதிப்புகளுக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கும் உடற்பயிற்சி இன்மையை கருத்தில் கொண்டு "நடப்போம் நலம் பெறுவோம்" என்ற திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் கொண்ட சுகாதார நடைபாதை கண்டறியப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சுகாதார நடைபாதைகளில் நடைப்பயிற்சி, தொற்றா நோய், இதய நோய் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கொண்ட வாசகங்கள் வைக்கப்பட்டு மக்களின் அத்தியாவசியமான தேவைகளும் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களை நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட நபர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ENGLISH
NADAPPOM NALAM PERUVOM THITTAM: Considering the lack of exercise which is a major factor in the incidence of heart disease, through the project "Walk for Health" 8 km health corridors have been identified in all the districts of Tamil Nadu and these health corridors have been selected with slogans of walking, infectious disease, heart disease and health awareness and the essential needs of the people.
It has been implemented and is being implemented as a scheme to encourage people to take up walking. More than 50,000 people are walking in an effort to improve their health.