
4th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
புதுதில்லியில் நடைபெற்ற மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
- புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். நிதி அமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌடில்யா பொருளாதார மாநாடு, பசுமை மாற்றத்திற்கு நிதியளித்தல், புவி-பொருளாதார பாதிப்பு, வளர்ச்சிக்கான தாக்கங்கள், பின்னடைவைத் தவிர்ப்பதற்கான கொள்கைகள் போன்ற கருப்பொருள்களில் கவனம் செலுத்தியது.
- மூன்றாவது கௌடில்யா பொருளாதார மாநாடு அக்டோபர் 4 முதல் 6 வரை நடைபெறுகிறது. இந்தியப் பொருளாதாரம், உலகின் தெற்குப் பகுதியின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சினைகள் ஆகியவை இந்திய, சர்வதேச அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்களால் இதில் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
- ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் இன்று (அக்டோபர் 4, 2024) பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயா ஏற்பாடு செய்திருந்த 'தூய்மையான, ஆரோக்கியமான சமூகத்திற்கான ஆன்மீகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
- திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை விசாரிக்க சிபிஐ இயக்குநர் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இரண்டு சிபிஐ அதிகாரிகள், இரண்டு ஆந்திர பிரதேச காவலர்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குழுவில் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.