6th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மெரினா கடற்கரையில் விமானப்படை சார்பில் வான் சாகச நிகழ்வு
- இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சார்பில் வான் சாகச நிகழ்வு நடைபெற்று வருகிறது.
- 72 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஜெட் விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளன. ஏர் ஷோவில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஸ்டண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- இந்த விமான சாகச நிகழ்வில் பங்கேற்கும் விமானப்படை குழுக்களுக்கு மூவேந்தர்களைக் குறிப்பிடும் வகையில் சேரா, சோழா, பாண்டியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- அதேபோல, சாகசத்தில் ஈடுபடும் போர் விமானங்களுக்கு புயல், சங்கம், பல்லவா, காவிரி, காஞ்சி, நீலகிரி, மெரினா ஆகிய பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.
- டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு , குறுகிய தூரம், விமானம், கப்பல், தரை என மூன்று நிலை வழியாக கையால் சுமந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் 4ம் தலைமுறைக்கான நவீன தொழில்நுட்ப வசதியுடைய விசோராட்ஸ் ரக ஏவுகணையை வடிவமைத்துள்ளது.
- இந்த ஏவுகணை இன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக அழித்து தாக்கியது.