Type Here to Get Search Results !

2024ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSIOLOGY OR MEDICINE 2024

2024ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSIOLOGY OR MEDICINE 2024
  • 2024ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSIOLOGY OR MEDICINE 2024: 2024 ஆம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அவர்களின் கண்டுபிடிப்புகள் பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பதையும், மனித உடல் எவ்வாறு பல்வேறு வகையான திசுக்களால் ஆனது என்பதையும் விளக்க உதவுகிறது. 
  • மரபணுக்களில், மைக்ரோ RNA எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி இவர்களின் ஆராய்ச்சி இருந்தது. அவர்கள் இருவருக்கும் சேர்த்து 11 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா (£810,000) பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

என்ன ஆராய்ச்சி?

  • 2024ம் ஆண்டிற்கான உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN PHYSIOLOGY OR MEDICINE 2024: மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள DNA-வில் நமது மரபணு சார்ந்த தகவல்கள் இருக்கின்றது. 
  • எலும்பில் உள்ள உயிரணுக்கள், நரம்பில் உள்ள உயிரணுக்கள், தோலில் உள்ள உயிரணுக்கள், இதயத்தில் உள்ள உயிரணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் இந்த மரபணு தகவல்களை வெவ்வேறு சிறப்பு வழிகளில் பயன்படுத்துகின்றன.
  • மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும், எனவே மைக்ரோ RNA உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
  • வழக்கத்திற்கு மாறான மைக்ரோ RNA-களின் ஒழுங்குமுறை புற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு கோளாறுகள் போன்ற உடலில் பிரச்னைகள் ஏற்படலாம்.
  • 70 வயதான பேராசிரியர் அம்ப்ரோஸ் மாசசூசெட்ஸ் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரியிலும், 72 வயதான பேராசிரியர் ருவ்குன ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியிலும் பணிபுரிகின்றனர்.
  • உடலியக்கவியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களை ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முந்தைய நோபல் பரிசு வெற்றியாளர்கள்

  • 2023 - கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் (mRNA கோவிட் தடுப்பூசிகளுக்கு வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக)
  • 2022 - ஸ்வாண்டே பாபோ (மனிதர்களின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிக்காக)
  • 2021 - டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் (நமது உடல் தொடுதல் உணர்வு மற்றும் வெப்பநிலையை எவ்வாறு உணர்கிறது என்பதற்கான ஆராய்ச்சிக்காக)
  • 2020 - மைக்கேல் ஹூட்டன், ஹார்வி ஆல்டர் மற்றும் சார்லஸ் ரைஸ் (ஹெபடைடிஸ் சி வைரஸைக் கண்டுபிடித்ததற்காக)
  • 2019 - சர் பீட்டர் ராட்க்ளிஃப், வில்லியம் கெய்லின் மற்றும் கிரெக் செமென்சா (செல்கள் ஆக்ஸிஜன் அளவை எவ்வாறு உணர்கின்றன மேலும் அதற்கேற்றபடி எவ்வாறு அவற்றை மாற்றிக்கொள்கின்றன என்பதை கண்டறிந்ததற்காக)
  • 2018 - ஜேம்ஸ் பி அலிசன் மற்றும் தசுகு ஹோன்ஜோ (உடலின் நோயெதிர்ப்பு சக்தி மூலம் புற்றுநோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதைக் கண்டுபிடித்ததற்காக)
  • 2017- ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் (நமது உடல் எப்படி சிர்க்காடியன் ரிதம் அல்லது கடிகாரத்தை வைத்தது போல செயல்படுகின்றது என்பதைக் கண்டுபிடித்ததற்காக)
  • 2016 - யோஷினோரி ஓசுமி (கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் செல்கள் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக)

ENGLISH

  • NOBEL PRIZE IN PHYSIOLOGY OR MEDICINE 2024: The 2024 Nobel Prize in Physiology or Medicine has been awarded to American scientists Victor Ambrose and Gary Ruvkun for the discovery of microRNA (RNA).
  • Their findings help explain how life originated on Earth and how the human body is made up of different types of tissue. Their research was about how micro RNA affects genes. A combined prize money of 11 million Swedish krona (£810,000) will be awarded to both of them.

What research?

  • NOBEL PRIZE IN PHYSIOLOGY OR MEDICINE 2024: The DNA in every cell of the human body contains our genetic information. Cells in bone, cells in nerves, cells in skin, cells in heart, white blood cells, and all cells in the body use this genetic information in different specialized ways.
  • Without the ability to regulate gene expression, every cell of an organism would be identical, so micro RNA played a key role in the development of organisms. Abnormal regulation of micro RNAs can cause problems in the body such as cancer, congenital hearing loss and bone disorders.
  • Professor Ambrose, 70, works at the University of Massachusetts Medical School, and Professor Ruvguna, 72, works at Harvard Medical School. The Nobel Prize winners in chiropractic or medicine are selected by the Nobel Council of the Karolinska Institute in Sweden.

Previous Nobel Prize Winners

  • 2023 - Katelyn Carrico and Drew Weissman (for developing the technology that led to mRNA Covid vaccines)
  • 2022 - Svante Pabo (for research on human evolution)
  • 2021 - David Julius and Artem Pataboutian (for research into how our body senses touch and temperature)
  • 2020 - Michael Houghton, Harvey Alter and Charles Rice (for discovery of hepatitis C virus)
  • 2019 - Sir Peter Radcliffe, William Cailin and Greg Semenza (for discovering how cells sense oxygen levels and adjust them accordingly)
  • 2018 - James P Allison and Tasuku Honjo (for discovering how to fight cancer through the body's immune system)
  • 2017 – Jeffrey Hall, Michael Rosbash and Michael Young (for discovering how our bodies work to set a circadian rhythm or clock)
  • 2016 - Yoshinori Ohzumi (for discovering how cells stay healthy by recycling waste products)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel