பிரதமர் மோடியுடன் ஜமைக்கா பிரதமர் சந்திப்பு - 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
- இந்தியா வந்துள்ள ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இதனிடையே, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம், கலாச்சார பரிமாற்றம், விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பு என இந்தியா - ஜமைக்கா இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
- ஜமைக்காவின் பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 1.62 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 6.5% அதிகரித்துள்ளது.
- இதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும்.
- செப்டம்பர் மாதத்தில் சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகிய வரிகளின் மூலம் கிடைத்த வசூலும் அதிகரித்துள்ளது.
- 2024-ல் இதுவரை வசூலான மொத்த ஜிஎஸ்டி 10.9 லட்சம் கோடி. இதுகடந்த ஆண்டை விட 9.5% அதிகமாகும். கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.9.9 லட்சம் கோடி வசூலானது.
- இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. 2023 - 2024 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி ரூ. 20.18 லட்சம் கோடி. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11.7% அதிகமாகும்.