
18th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2023-24ல் இந்தியாவில் நேரடி வரிவசூல்
- பாஜக அரசு பொறுப்பேற்ற 2014-15ம் நிதியாண்டில் மொத்த நேரடி வரிவசூல் 6.96 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிவசூல் 4.29 லட்சம் கோடி ரூபாயாகவும், தனிநபர் வரிவசூல் 2.66 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2023-24ம் நிதியாண்டில் 19 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகளவு என வருமான வரித்துறை கூறியுள்ளது.
- இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிவசூல் இரு மடங்காக உயர்ந்து 9 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும், தனிநபர் வருமான வரிவசூல் நான்கு மடங்கு உயர்ந்து 10.45 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2014-15 நிதியாண்டில் வருமானவரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 4.04 கோடியாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 8கோடியே 61லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதேபோல் 2014-15ம் நிதியாண்டில் 5.70 கோடியாக இருந்த வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 10.41 கோடியாக உயர்ந்து இருந்தாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
- ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், ஒன்பது பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு தனியார் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவை இந்த வங்கிகளாகும்.
- தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பெண் தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிப்பதற்காக இந்த வங்கிகள் குறிப்பிட்ட திட்டங்களை வடிவமைத்துள்ளன.
- அவ்வாறு வடிவமைக்கப்பட்ட கடன் திட்டங்கள் பெண்கள் தங்கள் நிறுவனங்களை அளவிடுவதற்கு பெரிய அளவிலான கடன்களைப் பெற உதவும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தபடி லட்சாதிபதி சகோதரியை உருவாக்கும் இலக்கை அடைவதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.