புதிய நீதி தேவதையின் சிலை / NEW STATUE OF LADY OF JUSTICE
TNPSCSHOUTERSOctober 18, 2024
0
புதிய நீதி தேவதையின் சிலை / NEW STATUE OF LADY OF JUSTICE: இந்தியாவின் நீதி தேவதையின் சிலை கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும். அதாவது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதையும் பணம், அதிகாரம் ஆகியவற்றை சட்டம் பார்க்காது என்பதையும் குறிக்கும் வகையில் கண்கள் கட்டப்பட்டு இருக்கும். அது போல் கையில் இருக்கும் வாள் வரலாற்று ரீதியில் அநீதியை தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது.
வலது கையில் இருக்கும் தராசு, தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலனை செய்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை குறிக்கும் வகையில் உள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான நூலகத்தில் கண்கள் கட்டப்படாத வாள் இல்லாத நீதி தேவதையின் சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அறிவுறுத்தலின் பேரில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சட்டம் என்பது ஒரு இருட்டறை அல்ல என்பதை குறிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய நீதி தேவதையின் சிலையில் வாளுக்கு பதிலாக அரசியல் அமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது. இதில் வாள் என்பது வன்முறையை குறிப்பதாக இருப்பதால் அதற்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகத்தை வைத்ததாக சந்திரசூட் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த பழைய சிலை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. அது போல் புதிய சிலையில் தராசு இருக்கிறது. நெற்றியில் திலகமும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ENGLISH
NEW STATUE OF LADY OF JUSTICE: The statue of the goddess of justice in India is blindfolded and sword in hand. This means that everyone is equal before the law and the law does not look at money and power.
As such, the sword in the hand has historically symbolized the punishment of injustice and the establishment of authority. The scales on the right hand represent the maintenance of social balance by carefully considering the arguments of both sides before passing judgement.
In this situation, the statue of justice deity without blindfolded sword was unveiled yesterday in the library for judges in the Supreme Court. It has been opened on the instructions of Chief Justice Chandrachud of the Supreme Court. This change seems to indicate that law in India is not a dark room.
The statue of the new angel of justice replaces the sword with a constitution book. In this, Chandrachud had said that the constitution book was placed instead of the sword as it signifies violence.
And this old statue was designed during the British rule. This has now been changed. Similarly, the new statue has scales. The forehead is also designed to have tilak.