16th OCTOBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லா பதவியேற்பு
- ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு முதல் முதலாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
- தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பாஜக 29 இடங்களிலும், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜேபிசி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
- இதையடுத்து தான் ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரான ஓமர் அப்துல்லா பதவியேற்றார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- அதேபோல் துணை முதல்வராக இந்து மதத்தை சேர்ந்த சுரிந்தர் சவுத்ரி பொறுப்பேற்றார். இவர் தான் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமான பிறகு முதல் இந்து மத துணை முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
- ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான பங்களிப்பு அளித்த வீரர்கள் இந்த விருது பட்டியலில் இடம்பெறுவர்.
- ‘மிஸ்டர் 360’ என்றழைக்கப்படும் தென்னப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விக்கெட் கீப்பர் - பேட்டர் ஏபி டிவில்லியர்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் மற்றும் இந்திய மகளிரணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் நீத்து டேவிட் ஆகிய மூவரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வாழ்நாள் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு தவணை அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய அடிப்படைச் சம்பளம் / ஒய்வூதியத்தின் 50%-ஐவிட மூன்று சதவீத (3%) உயர்வு. 01.07.2024 தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
- விலைவாசி உயர்வை ஈடுகட்டும் விதமாக, ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படுகிறது.
- இந்த உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,448.35 கோடி செலவு ஏற்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுமார் ரூ.2,642 கோடி மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், நெரிசலைக் குறைக்கும், இது இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும்.
- இந்தத் திட்டம் உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் சந்தெளலி மாவட்டங்கள் வழியாக செல்கிறது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 2025-26 சந்தைப் பருவத்தில் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 2025-26 சந்தைப் பருவத்திற்கான ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்தியுள்ளது.
- கடுகு குவிண்டாலுக்கு ரூ.300-ம், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.275-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு, கோதுமை, குங்குமப்பூ, பார்லி ஆகியவற்றின் விலை குவிண்டாலுக்கு முறையே ரூ.210, ரூ.150, ரூ.140, பார்லி ரூ.130 உயர்ந்தப்பட்டுள்ளது.
- கோதுமைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 2425 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே ரூ. 2275 ஆக இருந்தது