Type Here to Get Search Results !

போலீஸ் அக்கா திட்டம் / POLICE AKKA THITTAM

  • போலீஸ் அக்கா திட்டம் / POLICE AKKA THITTAM: கல்லூரி மாணவிகளை பாதுகாக்கும் நோக்குடன் 2022 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது 'போலீஸ் அக்கா' திட்டம். இதில், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரு மகளிா் காவலா் தொடா்பு அலுவலராக நியமிக்கப்படுவார்.
  • அவர் மாணவிகளுடன் கலந்துரையாடுவார். உளவியல், பாலியல் ரீதியிலான பிரச்னைகளை கேட்டறிவார். தொடர்புடைய துறையினர், நிபுணர்களிடம் கலந்தாலோசித்து தக்க தீர்வு காண்பார். ஆலோசனைகள் வழங்குவார். 
  • உற்ற சகோதரியாக மாணவிகள் பகிரும் தகவல்களை ரகசியமாக வைத்திருப்பார். கடந்த இரு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள 70 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. 
  • மேலும், 473 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு வழக்குப் பதிவு செய்யாமலேயே தீர்வு காணப்பட்டிருக்கிறது.
  • விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மகளிர் கல்லூரிகளில் காவல்துறையினர் நடத்தி வருகின்றனர். காதல் விவகாரம், தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல், ஆபாச குறுஞ்செய்திகள் போன்ற விஷயங்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள மாணவிகளுக்கு உதவுகிறது போலீஸ் அக்கா.
  • ஒவ்வொரு கல்லூரியிலும் இத்திட்டம் பற்றி ஒரு போஸ்டர் இருக்கும். அந்த போஸ்டரை ஸ்கேன் செய்தால் காவலர்களின் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் மாணவிகளுக்கு கிடைக்கும். இதன்மூலம் தங்கள் பிரச்னைகளை எளிதில் தெரியப்படுத்தலாம்.

ENGLISH

  • போலீஸ் அக்கா திட்டம் / POLICE AKKA THITTAM: The 'Police Akka' project was launched in Coimbatore in 2022 with an aim to protect college girls. In this, a woman constable will be appointed as Liaison Officer for all the colleges.
  • He will discuss with the students. He can listen to psychological and sexual problems. He will consult with the relevant departments and experts and find a suitable solution. Will give advice. 
  • As a close sister, she keeps the information shared by the students confidential. 70 colleges in Coimbatore metropolitan areas have been affiliated under the scheme which has been implemented for the last two years. Also, 473 complaints have been received. Most of them have been resolved without filing a case.
  • Police are also conducting awareness programs in women's colleges. Police sister also helps girls to protect themselves from love affairs, threats to post private photos on social media, obscene text messages.
  • Every college will have a poster about the scheme. If the poster is scanned, the details including the mobile number of the guards will be available to the students. Through this they can easily make their problems known.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel