தமிழக அரசு டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம்
- அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.
- அங்கு இதுவரைக்கும் பத்து குழிகள் தோண்டப்பட்டு ஆபரணங்கள், செப்புக்காசுகள், சுடுமண் காதணிகள், சூது பவளம், உள்பட 1560 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த நிலையில், ஒன்பதாவது அகழாய்வு குழியை மேலும் தோண்டியபோது பச்சை நிறத்திலான இரண்டு கல்மணிகள் கிடைத்துள்ளன.
- இந்த கல்மணிகள் பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்களாகவும், ஆண்கள் அணியும் மோதிரத்தில் பதிப்பதற்காகவும் பயன்படுத்தி இருக்கலாம்.
- உலகம் முழுவதும் தமிழ் மொழியின் நாகரிகம், பண்பாட்டை வளர்க்கவும், பேணிக் காக்கவும் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- இந்த நிலையில், சிங்கப்பூரில் முதல் சர்வதேச திருவள்ளுவர் கலாசார மையத்தை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அரசு முறைப்படியான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 5-வது முறையாக சிங்கப்பூர் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின் போது இருநாடுகளிடையே செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இணையப் பாதுகாப்பு, தொழில்நுட்பப் பகிர்வு, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி, செமி கண்டக்டர் துறை உள்ளிட்டவை தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- இதனையடுத்து சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார்.
- பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய சார்பில் பங்கேற்றுள்ள 84 வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
- 7வது நாளான இந்தியா ஆடவர்களுக்கான எப்51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பீர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் பந்தினை 34.92 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், கிளப் எறிதல் போட்டியில் ஆசிய அளவில் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரரான பிரனவ் சர்மா 34.59 மீட்டர் தூரம் பந்தினை வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- ஆடவர்களுக்கான வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில், போலந்து வீரர் லீகசுடன் மோதிய ஹர்விந்தர்சிங் 6-0 என மிக எளிதாக வெற்றிபெற்று பதக்கத்தை பெற்றார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் என இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, இந்தியர் ஒருவர் வில்வித்தை பிரிவில் தங்கம் வெல்வது என்பது இதுவே முதல்முறையாகும்.
- தற்போது வரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம், 24 பதக்கங்களுடன் 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 62 தங்கம் உட்பட 135 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 33 தங்கம் உட்பட 74 பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் இரண்டாவது இடத்திலும், 25 தங்கம் உட்பட 63 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.