4th SEPTEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஈட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு முதலீட்டாளர்கள், முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- அதன்படி, ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் தொழில் மையங்களை அமைக்க உள்ளன.
- இதனை தொடர்ந்து இன்று மேலும் இரண்டு நிறுவனங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளன.
- அதாவது மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
- தென்னாப்பிரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் குழுவினர், ஆபத்தான சூழல் அல்லது விபத்தில் சிக்கினால் அதை மீட்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு கடற்படைகளும் கையெழுத்திட்டுள்ளன.
- இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, தென்னாப்பிரிக்க கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் மான்டே லோப்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- கடல்சார் பாதுகாப்பு, பரஸ்பர ஆதரவுக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அமலாக்குவதை இந்த ஒப்பந்தம் எடுத்துக் காட்டுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படை தனது நீர் மூழ்கி மீட்பு வாகனத்தின் (டிஎஸ்ஆர்வி) உதவியை தேவைப்படும்போது தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கும்.
- இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவுகளை இது மேலும் வலுப்படுத்தும். இந்த இத்துழைப்பு இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான நீண்டகால கடல்சார் உறவை வலுப்படுத்தும் வகையில் அமையும்.
- பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17வது பாராலிம்பிக் தொடர் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் செப்.8-ம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகின்றன.
- இதில் 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 பேர் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ஆண்களுக்கான குண்டு எறிதல் (F46) பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
- இதில் பங்கேற்ற இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.32 மீட்டர் தூரம் குண்டு வீசி 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
- ஆண்களுக்கான டி-63 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத்குமார், சைலேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்த்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
- பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீப்தி ஜீவன் வென்றார்.
- பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆடவர் ஈட்டி எறிதல் F46 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜார் வென்றார்.
- ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்46 பிரிவில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா மொத்தம் 21 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இதுவரை வென்றுள்ளது. 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்கள் கிடைத்துள்ளன.