புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திறந்து வைத்தார்
- சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக பண்டார் செரி பெகாவான் நகருக்கு இன்று சென்றடைந்தார்.
- புருனேவுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். இந்தியா புருனே இடையேயான தூதரக உறவுகள் 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இது பிரதமரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாகும்.
- பண்டார் செரி பெகாவான் வந்தடைந்த பிரதமருக்கு, சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனே பிரதமர் அலுவலகத்தின் பட்டத்து இளவரசரும், மூத்த அமைச்சருமான மேதகு இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதீ பில்லா பிரதமரை அன்புடன் வரவேற்றார்.
- புருனேயில் இந்திய தூதரகத்தின் புதிய அலுவலக வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அவர் குத்துவிளக்கேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.
- திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக திகழ்வதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் அவர்களின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.
- புருனேக்கு வரும் இந்தியர்களின் முதல் கட்டம் 1920-களில் எண்ணெய் கண்டுபிடிப்புடன் தொடங்கியது. தற்போது, சுமார் 14,000 இந்தியர்கள் புருனேயில் வசித்து வருகின்றனர்.
- புருனேயின் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்திய மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- கமாண்டர்கள் கூட்டு மாநாடு, உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் உள்ள மத்திய படைப்பிரிவு தலைமையகத்தில் 2024, செப்டம்பர் 04 & 05 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
- பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், செப்டம்பர் 5 அன்று பாதுகாப்புப் படை தயார்நிலை குறித்து ஆய்வு செய்து, உயர்மட்ட ராணுவத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
- முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் செப்டம்பர் 4 அன்று தொடக்க உரையாற்றுகிறார். ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல் திட்டங்களை மறுஆய்வு செய்யவும், முப்படைகளிடையே கூட்டு மற்றும் மேம்பட்ட ஒருங்கிணைப்பு மூலம் நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் கமாண்டர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்கும்.
- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில், 2024 செப்டம்பர் 03 அன்று பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழு ரூ.1,44,716 கோடி மதிப்புள்ள 10 மூலதன கையகப்படுத்தல் திட்டங்களுக்கான தேவைக்கு வழங்கியது.
- மொத்த மதிப்பில், 99% தளவாடங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட பெறப்படுகிறது. இந்திய ராணுவத்தின் டாங்கி கடற்படையை நவீனப்படுத்துவதற்காக, எதிர்கால ஆயத்த போர் வாகனங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- வான் பாதுகாப்பு தீ கட்டுப்பாட்டு ரேடார்கள் வாங்குவதற்கும் வான்வழி இலக்குகளை கண்டறிந்து கண்காணிக்கவும், ரேடார்களை வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இந்த உபகரணம் கவச வாகனங்கள் நிகாம் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது, மேலும் இது இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பட்டாலியன் மற்றும் கவச படைப்பிரிவு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படும்.
- பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- பாரிஸ் பாராஒலிம்பிக் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் - சீனாவின் க்யு ஹ்யா யங் உடன் மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். வெற்றி பெற்ற க்யு ஹ்யா யங் தங்கப்பதக்கம் வென்றார்.
- ஹரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த 26 வயதான சுமித் அன்டில் நேற்று நடைபெற்ற பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்து தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
- பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான(எஸ்எல்4) தனிநபர் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சுஹாஸ், பிரான்ஸ் வீரர் லூகாஸுக்கு எதிரான நடைபெற்ற போட்டியில், சுஹாஸ் 9 - 21, 13 - 21 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். இதன்மூலம், பாராலிம்பிக்ஸ் பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெள்ளி வென்று சாதித்துள்ளார்.
- 5ஆம் நாளான இன்று (செப். 2) ஆடவர் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் எஃப் 56 பிரிவில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
- மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு, திரிபுரா அரசு மற்றும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா புலிகள் படை (ATTF) பிரதிநிதிகள் இடையே புதுதில்லியில் 2024 செப்டம்பர் 4 புதன்கிழமை அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது.
- இந்த நிகழ்ச்சியில், திரிபுரா முதலமைச்சர் பேராசிரியர் (டாக்டர்) மாணிக் சாஹா மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் திரிபுரா அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.