டாடா தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28.09.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
- இத்திட்டத்தில், 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சொகுசு வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
- இவ்வாண்டு மார்ச் மாதம் இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப்பட்ட ஆறு மாதத்திற்குள், இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், நாட்டில் சில முக்கிய தாதுக்களின் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. மதிப்பு அடிப்படையில் மொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது சுமார் 70% ஆகும்.
- 2023-24 நிதியாண்டில் இரும்புத்தாது உற்பத்தி 274 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 108 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இரும்புத் தாது உற்பத்தி, 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) தற்காலிக தரவுகளின்படி, 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
- இது ஆரோக்கியமான 7.4% வளர்ச்சியைக் காட்டுகிறது. மாங்கனீசு தாது உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 15.4% அதிகரித்து 1.5 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
- இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 1.3% அதோகரிப்பைப் பதிவு செய்தது.
- இது 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 17.26 லட்சம் டன் என்பதிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-ஆகஸ்ட்) 17.49 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
- இதே காலகட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி 1.91 லட்சம் டன்னிலிருந்து 2.02 லட்சம் டன்னாக 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
- சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ள இந்தியா, உலகின் 2வது பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும், 4வது பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளராகவும் உள்ளது.