ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் சாக்ஷி தன்னார்வ தொண்டு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
- கிராமப்புற பகுதிகளில் சட்ட விழிப்புணர்வை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங், லாப நோக்கற்ற அமைப்பான சாக்ஷி தன்னார்வ தொண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
- தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெண்களுக்கு சட்ட ரீதியான தீர்வுகள் வழங்கப்படுவது மகளிர் உரிமைகளை வலுப்படுத்தும்.
- சாக்ஷி என்பது சட்ட ஆலோசனை, கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பாகும்.
- மத்திய அரசின் சுகாதார அமைச்சகமும், ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து தில்லியில் பருவநிலை மற்றும் சுகாதார தீர்வுகள் இந்தியா என்ற தலைப்பிலான மாநாட்டை நடத்துகின்றன.
- இன்று (25.09.2024) தொடங்கிய இந்த இரண்டு நாள் மாநாடு கொள்கை வகுப்பாளர்கள், வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒருங்கிணைத்துள்ளது.
- இந்தியாவின் சுகாதாரத் துறைக்கு தேவையான உத்திகளை பருவநிலை மாற்றம் மற்றும் பொது சுகாதாரம் ஆகிய இரட்டை அம்சங்களுக்கு ஏற்ப வகுப்பதை இந்த இரண்டு நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.