20th SEPTEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பெண் பணியாளர்களுக்கு தங்குமிடம் தமிழக அரசு, டாடா பவர் ஒப்பந்தம்
- திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், 'சிப்காட்' தொழில் பூங்காவில் அமைக்கப்பட உள்ள குடியிருப்பு வளாகத்தில், 'டாடா பவர்' ஆலையில் பணிபுரியும், 500 பெண்கள் தங்குமிடம் அமைக்க, தமிழக 'இண்ட்ஸ்டரியல் ஹவுசிங்' நிறுவனம் மற்றும் டாடா பவர் இடையே சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- தமிழக அரசின் சிப்காட் மற்றும் தமிழக உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் ஆகியவை 'டைடல் பார்க்' நிறுவனத்துடன் இணைந்து, தமிழக இண்டஸ்ட்ரியல் ஹவுசிங் என்ற முகமையை 2022ல் துவக்கின.
- கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில், டாடா பவர் சோலார் நிறுவனம், 313 ஏக்கரில், 'சோலார் பி.வி.செல் மற்றும் மாட்யூல்' உற்பத்தி ஆலைbயை, 4,300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைத்துள்ளது.
- அங்கு பணிபுரிபவர்களில், 80 சதவீதம் பெண்கள். அவர்களில், 500 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தங்குமிடம் அமைக்க தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி முன்னிலையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில், உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சி மாநாடு 2024-ன் இரண்டாவது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த உச்சிமாநாடு, உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் உலக உணவு இந்தியா 2024 நிகழ்வுக்கு இடையே நடத்தப்படுகிறது.
- உணவு மதிப்புச் சங்கிலி முழுவதும் உணவு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கான உலகளாவிய தளத்தை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை: 1986-87=100) ஆகஸ்ட் 2024-ல் தலா 7 புள்ளிகள் அதிகரித்து, முறையே 1297 மற்றும் 1309 நிலைகளை எட்டியது.
- ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 5.96%- ஆக இருந்தது.
- 2023 ஆகஸ்டில் இது 7.37%-ஆக இருந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் 6.08% -ஆக இருந்தது. இது ஆகஸ்ட் 2023-ல், 7.12%-ஆக இருந்தது.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் திருமதி எல் சி விக்டோரியா கௌரி, திரு பி பி பாலாஜி, திரு கே கே ராமகிருஷ்ணன், திருமதி ஆர் கலைமதி, திருமதி கே ஜி திலகவதி ஆகிய ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.