18th SEPTEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒரே நாடு, ஒரே தேர்தல் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுளது. முதல் கட்டமாக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறும். முதல் கட்டத் தேர்தல் நடைபெற்ற 100 நாள்களுக்குள், இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ககன்யான் திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பாரதிய விண்வெளி நிலையத்தின் (பிஏஎஸ்-1) முதல் தொகுதியை மேம்படுத்தவும், கட்டமைப்பதற்கும், இயக்குவதற்கும் பல்வேறு தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்து சரிபார்க்கும் இயக்கங்களை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பாரதிய விண்வெளி நிலையம் மற்றும் முன்னோடி இயக்கங்களுக்கான புதிய மேம்பாடுகள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள ககன்யான் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான கூடுதல் தேவைகளை உள்ளடக்கும் வகையில் ககன்யான் திட்டத்தின் நோக்கம் மற்றும் நிதியுதவியை மாற்றியமைத்தல் இதில் அடங்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அடுத்த தலைமுறை செலுத்து வாகனத்தை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவி இயக்குவது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விண்வெளி வீர்ர்கள் தரையிறங்குவதற்கான திறனை வளர்ப்பது என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாக இது அமையும்.
- எல்விஎம்-3 உடன் ஒப்பிடும்போது என்ஜிஎல்வி தற்போதைய செலுத்து திறனை விட 3 மடங்குடன் 1.5 மடங்கு செலவைக் கொண்டிருக்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,வெள்ளி கிரக சுற்றுவட்டப் பாதையை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- சந்திரன், செவ்வாய் கிரகங்களைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் அரசின் தொலைநோக்குப் பார்வையை நோக்கிய குறிப்பிடத்தக்க படியாக இது அமையும்.
- பூமிக்கு மிக நெருக்கமான கிரகம் மற்றும் பூமியைப் போன்ற நிலைமைகளில் உருவாகியதாக நம்பப்படும் வீனஸ், கிரக சூழல்கள் எவ்வாறு மிகவும் வித்தியாசமாக உருவாகலாம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
- வீனஸ் ஆர்பிட்டர் மிஷனுக்காக (VOM) ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த நிதி ரூ.1236 கோடியாகும், இதில் ரூ.824.00 கோடி விண்கலத்திற்காக செலவிடப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நிலவில் வெற்றிகரமாக இறங்கிய பின்னர் பூமிக்கு திரும்புவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமியில் பகுப்பாய்வு செய்யவும் சந்திரயான்-4 என்று பெயரிடப்பட்ட பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த சந்திரயான் -4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் (பாரதிய அந்தரிக்ஷ் நிலையம்), 2040 க்குள் சந்திரனில் இந்தியா அமிர்த கால இந்திய விண்வெளித் திட்டம் ஆகியவற்றுக்கான விரிவான தொலைநோக்குப் பார்வையை மத்திய அரசு வகுத்துள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (18.09.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் இரண்டு முக்கியத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, "உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவோர் மேம்பாடு (Biotechnology Research Innovation and Entrepreneurship Development -Bio- RIDE)" என்ற ஒரே திட்டமாக இணைக்கப்பட்டு, உயிரி உற்பத்தியின் புதிய அம்சங்களுடன் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதிக்குழு காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமான 'பயோ-ரைடு' திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒதுக்கீடு ரூ.9197 கோடியாகும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கு, முழுமையான பாதுகாப்பைப் பின்பற்றுவதன் மூலம், பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, 79,156 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில் (மத்திய அரசு: 56,333 கோடி மற்றும் மாநில அரசு: 22,823 கோடி ரூபாய்) பிரதமரின் பழங்குடியினர் முன்மாதிரி கிராமத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இது 2024-25 பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டபடி 5 கோடிக்கும் அதிகமான பழங்குடி மக்களுக்கு பயனளிக்கும் சுமார் 63,000 கிராமங்களை உள்ளடக்கும். இது 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள் மற்றும் 2,740 வட்டாரங்களை உள்ளடக்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ஆதாயமான விலை கிடைbக்கவும், நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலையற்ற தன்மையைக் கட்டுப்படுத்தவும் பிரதமரின் விவசாயின் விளைபொருளுக்கு லாபத்தை உறுதி செய்யும் திட்டங்களை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது .
- 2025-26-ம் ஆண்டு வரையிலான, 15-வது நிதிக்குழு சுழற்சியில் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.35,000 கோடியாக இருக்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கு 2024-ம் ஆண்டு ரபி பருவத்தில் (01.10.2024 முதல் 31.03.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான ரசாயனம் - உரத் துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2024 ஆம் ஆண்டு ரபி பருவத்திற்கான உத்தேச நிதித் தேவை தோராயமாக ரூ.24,475.53 கோடியாக இருக்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி ஆகியவற்றுக்கான தேசிய திறன் மையம் (ஏ.வி.ஜி.சி-எக்ஸ்ஆர்) நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் பிரிவு 8-ன் கீழ் இந்தியாவில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- நாட்டில் ஏ.வி.ஜி.சி பணிக்குழுவை அமைப்பதற்கான மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகார அமைச்சரின் 2022-23 பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் மும்பையில் தேசிய திறன் மையம் அமைக்கப்படும்.