17th SEPTEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா
- மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் விடுதலையானார் அரவிந்த கெஜ்ரிவால்.
- முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
- இதற்கிடையே, இன்று காலை 11.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
- அதே நேரத்தில அதிஷி டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒடிசா அரசின் முன்னோடித் திட்டமான 'சுபத்ரா' திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.09.2024) தொடங்கி வைத்தார். இது பெண்களை மையமாகக் கொண்ட மிகப்பெரிய திட்டமாகும்.
- மேலும் இது 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நிதி பரிமாற்றத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- நாடு முழுவதும் இருந்து வீட்டு வசதித் திட்டத்தின் 26 லட்சம் பயனாளிகளுக்கான கிரகப் பிரவேச கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார். பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளையும் அவர் வழங்கினார்.
- பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தில் கூடுதல் வீடுகளின் கணக்கெடுப்பு, பிரதமரின் நகர்ப்புற நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0-ன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களுக்கான ஆவாஸ் + 2004 (Awaas+ 2024) செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.
- ஒடிசா அரசின் பெண்களை மையமாகக் கொண்ட சுபத்ரா யோஜனா திட்டத்தையும், மாநிலத்தில் ரூ.3,800 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- மாநிலத்தில் 2,871 கோடி மதிப்பிலான தேசிய ரயில்வே திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் ஜனதா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.
- ஆசிய சாம்பியன்ஸிப் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் சீனத்தின் ஹுலுன்பியர் நகரில் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது.
- இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- மூன்றாவது ஆட்டத்தில் மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை ஊதித் தள்ளி அரையிறுதிக்கு முன்னேறியது.
- அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வென்ற இந்தியா இறுதிப்போட்டியில் சீனாவை சந்தித்தது. ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
- நடப்புத் தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை சென்று பட்டத்தை தனதாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி வென்ற 5-ஆவது கோப்பை இதுவாகும்.