16th SEPTEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம்
- குஜராத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் 'வந்தே மெட்ரோ' ரயில் சேவைக்கு 'நமோ பாரத் ரேபிட் ரயில்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- முழுவதும் AC பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா சேவையாக இவ்வகை ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. அகமதாபாத் – புஜ் இடையே 360 கி.மீ.தூரத்திற்கு இயக்கப்படும் இந்த ரயிலின் கட்டணமாக ரூ.455 வசூலிக்கப்பட உள்ளது.
- குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், நான்காவது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாடு, 200 ஜிகாவாட் புதைபடிவம அல்லாத எரிபொருள் திறனை நிறுவியதில், இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைக்கு முக்கிய பங்களிப்பாளர்களை கௌரவிக்கிறது.
- பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில்துறை நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் கண்காட்சியையும் திரு மோடி பார்வையிட்டார்.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரயில்வே, சாலை, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நிதித் துறைகளில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
- முன்னதாக, அகமதாபாத் மற்றும் பூஜ் இடையே, இந்தியாவின் முதலாவது நமோ பாரத் விரைவு ரயிலை திரு மோடி தொடங்கி வைத்தார்.
- நாக்பூர் முதல் செகந்திராபாத், கோலாப்பூர் முதல் புனே, ஆக்ரா கன்டோன்மென்ட் முதல் வாரணாசி, துர்க் முதல் விசாகப்பட்டினம், புனே முதல் ஹூப்பள்ளி மற்றும் வாரணாசியில் இருந்து தில்லி வரையிலான 20 பெட்டிகள் கொண்ட முதல் வந்தே பாரத் ரயிலையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மேலும், சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் ஒற்றைச் சாளர தகவல் தொழில்நுட்ப முறையையும் அவர் தொடங்கி வைத்தார்.