10th SEPTEMBER 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்யும் முக்கிய நிறுவனமாக உள்ள ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைகிறது.
- திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- அதேபோல், Rockwell Automation என்கிற நிறுவனம் ரூ.666 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
- மேலும், தமிழக இளைஞர்களின் திறன், தமிழக சிறு குறு நிறுவனங்கள், மற்றும் தமிழக ஸ்டார்ட்அப்களை மேம்படுத்துவதற்கு பயிற்சி வழங்குவதற்காக Autodesk நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.09.2024) லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
- இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப நிலப்பரப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மறுவடிவமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
- இந்தக் கூட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவராக பங்கேற்றார்.
- அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
- இதன்போது இரு தலைவர்களும் அணுசக்தி, எண்ணெய் மற்றும் உணவுப் பூங்காக்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா அதிகாரப்பூர்வமாக உறவை ஏற்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
- குஜராத் அரசுக்கும், அபுதாபி நிறுவனத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், இந்தியாவில் பல உணவுப் பூங்காக்கள் கட்டப்படும்.
- அதே நேரத்தில், பராக்காவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அணுமின் நிலையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பாக இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- எரிசக்தி துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் கீழ், அபுதாபி நீண்ட காலத்திற்கு இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயுவை வழங்கும்.
- இந்திய கடற்படைக்காக கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (சி.எஸ்.எல்) நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் வல்லமை கொண்ட நான்காவது மற்றும் ஐந்தாவது கப்பல்களான மால்பே மற்றும் முல்கி ஆகியவை கொச்சியில் செப்டம்பர் 9, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டன.
- கடல்சார் மரபுகளுக்கு இணங்க, தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வி.ஏ.டி.எம் வி ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் திருமதி விஜயா ஸ்ரீனிவாஸ் இந்த இரண்டு கப்பல்களின் சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
- நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் வல்லமை கொண்ட எட்டு கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சி.எஸ்.எல் இடையே ஏப்ரல் 30, 2019 அன்று கையெழுத்தானது.
- மாஹே வகை கப்பல்களில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். கடலோர நீர்நிலைகளில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள் மற்றும் கண்ணிவெடி பதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்தக் கப்பல்களை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்துவது, 'தற்சார்பு இந்தியாவை' நோக்கி உள்நாட்டு கப்பல் கட்டுவதில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
- நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் வல்லமை கொண்ட கப்பல்கள் 80% உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும், இதன் மூலம் பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தி இந்திய உற்பத்தி அலகுகளால் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்து, நாட்டிற்குள் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டை உருவாக்குகிறது.
- புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற இந்திய சைபர் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) முதலாவது அமைப்பு தினக் கொண்டாட்டங்களில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
- சைபர் மோசடி தணிப்பு மையத்தை (சி.எஃப்.எம்.சி) நாட்டுக்கு அர்ப்பணித்த உள்துறை அமைச்சர், கூட்டு சைபர் குற்ற விசாரணை அமைப்பை தொடங்கி வைத்தார்.
- 'சைபர் கமாண்டோக்கள்' திட்டத்தையும், சந்தேகத்திற்குரியோர் பதிவேட்டையும் அமித் ஷா தொடங்கி வைத்தார். ஐ4சி-யின் புதிய சின்னம், தொலைநோக்குப் பார்வை மற்றும் இலக்கையும் அமைச்சர் வெளியிட்டார்.