கூட்டுறவு செயலி / KOOTUVARU MOBILE APP: கூட்டுறவுத் துறையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பல்வேறு வகை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொது மக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, கூட்டுறவு (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகைக்கடன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், பொது மக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப, கடன் விண்ணப்பத்தினை இணைய வழியே சமர்ப்பித்திடும் வகையில், இச்செயலியில் கடன் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம் கடன் விண்ணப்பத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம், கடன் விண்ணப்பங்கள் தொடர்புடைய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகளுக்கு இணையவழி சமர்ப்பிக்கப்பட்டு, கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கடன் தகவல்களை தெரிந்து கொள்ளவும், கடன் விண்ணப்பத்தினை இணைய வழியில் சமர்ப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர வகைக் கடன்களை கடன் விண்ணப்பம் என்ற பகுதியில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்செயலியின் தொகுப்பில் உங்கள் சங்கம் என்ற பகுதியில், பொது மக்கள் தங்களது பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் அமைந்துள்ள விவரங்களை தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இ-வாடகை என்ற பகுதியில், ஒரு உறுப்பினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் சேவை மையங்கள் குறித்த விவரங்களையும், வேளாண் பொறியியல் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப, வேளாண் பொறியியல் இயந்திரங்களின் இருப்பு நிலைினை அறிந்து, தேவையான வேளாண் உபகரணங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்படுத்திட ஏதுவாக இ வாடகை பகுதியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வங்கி சேவை பகுதியில், பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முகவரியினை தெரிந்து கொண்டு வங்கியினை தொடர்பு கொள்ள வங்கியின் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் மற்றும் மின் அஞ்சல் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி சேவைப் பகுதியில், கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்படும் அனைத்து வகைக் கடன்கள் குறித்த விவரங்கள், வழங்கப்படும் கடன் உச்ச அளவு, திருப்பிச் செலுத்தும் அதிகபட்ச கால அளவு, வட்டி விகிதம், கடன் வழங்கும் காரியம் போன்ற விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பணியாளர் நாள் என்ற பகுதியில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இசேவை என்ற பகுதியில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் பொது சேவை மையங்களின் முகவரி, அலைப்பேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவர்களது மாவட்டம், தாலுக்கா மற்றும் கிராம விவரங்களை தெரிவு செய்வதன் மூலம் அவர்களது பகுதியில் உள்ள பொது சேவை மையங்களின் இருப்பிட விவரத்தினை தெரிந்துகொண்டு பயன் பெறலாம்.
செயலியில், மருந்தகம் என்ற பகுதியில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் மருந்தகங்களின் விவரங்களை, அவர்களது மாவட்டம் மற்றும் நிறுவனத்தின் பெயர்களை தெரிவு செய்வதன் மூலம் பொது மக்கள் அவர்களது பகுதியில் உள்ள கூட்டுறவு மருந்தகங்களை தெரிந்து கொண்டு, 20% தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன் பெறலாம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் 100 மெ.டன், 500 மெ.டன், 1000 மெ.டன் மற்றும் 2000 மெ.டன் அளவுகளில் கிடங்குகள் கட்டப்பட்டு, கிடங்கு மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாய உறுப்பினர்களுக்கு அவர்களது விலை பொருட்களை பாதுகாப்பாக வைத்திடவும், விலைப்பொருட்கள் மீது தானிய ஈட்டுக் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்செயலியில் கிடங்கு என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கிடங்குகளின் முகவரி மறறும் அலைப்பேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய உறுப்பினர்கள் கிடங்கு வசதியினை குறைந்த வாடகையில் பெற்று பயன் பெறலாம்.
கூட்டுறவுச் செயலியில், நியாயவிலைக் கடை என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகள் விவரங்கள் அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அவர்களது மாவட்டம், தாலுக்கா மற்றும் கிராம விவரங்களை தெரிவு செய்வதன் மூலம் அவர்களது பகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடை முகவரி, தொலைப்பேசி எண் விவரங்களை இச்செயலி மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ENGLISH
KOOTUVARU MOBILE APP: In the cooperative sector, under the control of the Registrar of Cooperative Societies, an app named Cooperative (Kooturavu) has been developed and published so that the general public and the members of the association can know the services provided by the cooperative societies.
Through this system, loan applications have been designed so that the general public can submit their loan application through the internet as per their loan requirement, to get information about various types of loans provided by cooperative banks and societies.
By filling and submitting the relevant details in the loan application through this process, the loan applications are submitted online to the relevant cooperative societies and banks, and steps are taken to grant the loan.
Through this, the members and the general public have been provided a way to know the loan information and submit the loan application online. Through this process, crop loan, fish farming loan, animal husbandry loan and other types of loans have been provided in the section of loan application.
In this directory, under the heading 'Your Association', the general public can find out the details of the location of cooperative societies and banks in their area.
In the area called e-Rental, facilities have been established in this rental area to know the availability of agricultural engineering machinery, to know the availability of agricultural engineering machinery and to rent and use the necessary agricultural equipment according to the details of the agricultural service centers operated by the member primary agricultural cooperative credit societies.
In the banking service area, the public can know the address of the district central cooperative bank in their area and contact the bank with the bank's address and telephone number and email details.
Also, in the banking service section, the details of all types of loans provided by the Cooperative Bank, maximum loan amount, maximum repayment period, interest rate, lending process etc. have been compiled.
In the section entitled 'Workers' Day', provision is also made to know the details of the action taken on the petitions submitted by the workers working in the co-operative societies.
The address and telephone number details of public service centers run by cooperative societies have been compiled in this section. Public can avail location details of public service centers in their area by selecting their district, taluk and village details.
In the app, in the pharmacy area, by selecting the details of the cooperative pharmacies, their district and company names, the general public can find out about the cooperative pharmacies in their area and avail medicines at a discount of 20%.
Warehouses of 100 mt, 500 mt, 1000 mt and 2000 mt are constructed by Primary Agricultural Co-operative Credit Societies, Agricultural Producers Co-operative Marketing Societies and registered with Warehousing Development Authority to keep their valuables safe for public and farmer members, provision has also been made for availing grain yield loan on commodities.
In this website, under the name of Warehouse, the details of unaddressed mobile number of warehouses operated by cooperatives in Tamil Nadu have been compiled. Through this, the farmer members can get the benefit of getting the warehouse facility at a low rent.
All the details of fair price shops run by cooperative societies in Tamil Nadu have been compiled in the section called fair price shop in the co-operative app. By selecting their district, taluk and village details, the public can find the address, phone number and address of the fair price shop in their area through this system.