29th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பெண்ணின் திருமண வயது 21ஆக அதிகரிப்பு மசோதாவை நிறைவேற்றிய இமாச்சலப் பிரதேச அரசு
- குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் ஆணின் சராசரி திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் சராசரி திருமண வயது 18ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
- இதனை மாற்றும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு ஆண்களுக்கு நிகராக பெண்களுடைய திருமண வயதை 21ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. சில தரப்பு எதிர்ப்புகளால் இன்னும் அது அமல்படுத்தப்படாமல் உள்ளது.
- இந்த சூழலில் இமாச்சலப் பிரதேச அரசு பெண்களின் சராசரி திருமண வயதையும் 21ஆக அதிகரிக்கும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
- பாலிய சமத்துவத்தை உறுதி செய்யவும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி, தொழில் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக திருமண வயதை உயர்த்தியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- 2024 ஆகஸ்ட் 29 அன்று கோவாவில் உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலை அறிமுகப்படுத்தினார். இந்திய கடலோர காவல்படைக்கு கோவா கப்பல் கட்டும் நிறுவனம் இந்தக் கப்பலை கட்டியுள்ளது.
- இந்தக் கப்பல் நாட்டின் கடலோரப் பகுதியில் எண்ணெய் கசிவைத் தடுக்க உதவும். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில், திருமதி நீதா சேத் இந்த கப்பலுக்கு 'சமுத்ர பிரதாப்' என்று பெயரிட்டார்.
- இந்திய கடலோர காவல்படைக்கு ரூ.583 கோடி செலவில், இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவின் முன்னணி கப்பல் கட்டும் தளமான ஜி.எஸ்.எல் கையெழுத்திட்டது.
- இந்தக் கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்திய கடலோர காவல்படையின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 114.5 மீட்டர் நீளமும், 16.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல், 4170 டன் எடையை இடப்பெயர்ச்சி செய்யும்.