Type Here to Get Search Results !

முத்தமிழறிஞர் கலைஞர் வரலாறு / KALAIGNAR KARUNANITHI BIOGRAPHY

  • முத்தமிழறிஞர் கலைஞர் வரலாறு / KALAIGNAR KARUNANITHI BIOGRAPHY: தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஜூன் 3, 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் பிறந்து, தமது கடின உழைப்பாலும் அளப்பரிய திறமையாலும் தமிழ் வளத்தாலும், தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் ஆளுமையாக விளங்கியவர். 
  • முத்தமிழறிஞர் கலைஞர் என்பது பெயர் மட்டுமல்ல; தமிழினத்தின் தன்னேரில்லாத தனி முகவரி ! பல தலைமுறைகளின் எழுச்சிக்கான திறவுகோல் | 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர் என ஒரு தலைமுறை மாற்றத்திற்கு வித்திட்ட மகத்தான தலைவர்.
  • தமிழுணர்வு கொண்ட 14 வயது சிறுவனாகத் தம் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, 15ஆம் வயதில் "மாணவ நேசன்" என்ற கையெழுத்து ஏடு தொடங்கி, 18ஆம் வயதில் பேரறிஞர் அண்ணா அவர்களின், "திராவிட நாடு" இதழில் இளமைப்பலி என்ற அவரது முதற்கட்டுரை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 
  • தம்முடைய 20-ஆவது வயதில், திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார்.
  • தமது 23-ஆம் வயதில் இராஜகுமாரி திரைப்படத்திற்கு முதன் முதலாக வசனம் எழுதினார். முதன் முதலில் "முரசொலி" என்னும் துண்டு இதழ் வெளியீட்டை 1942-ஆம் ஆண்டு வெளியிட்டு; பின்னர் 1946 முதல் 1948 வரை திங்களிதழாக மாற்றி; பின் மீண்டும் 1953-இல் சென்னையில் திங்களிதழாகத் தொடங்கி 1960-ஆம் ஆண்டில் அதனை முழுமையான நாளிதழாக மாற்றினார். அந்த முரசொலி நாளிதழ் இன்றும் முழங்குகிறது.
  • அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ, சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் - நாடகக் காப்பியம், சேரன் செங்குட்டுவன், திருவாளர் தேசியம் பிள்ளை, தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித இராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்), மந்திரிகுமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார்.
  • வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல், ஒரே ரத்தம், ஒரு மரம் பூத்தது, அரும்பு, பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, நடுத்தெரு நாராயணி ஆகிய புதினங்களையும்;
  • ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் - சங்கர் அண்ணன்மார் வரலாறு, பாயும் புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம், தாய் - காவியம் ஆகிய வரலாற்றுப் புதினங்களையும்;
  • சங்கிலிச் சாமியார், கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை, தப்பிவிட்டார்கள், தாய்மை, நாடும் நாடகமும், முடியாத தொடர்கதை, பதினாறு கதையினிலே, நளாயினி, பழக்கூடை, தேனலைகள், ஒருமரம் பூத்தது, மு.க.வின் சிறுகதைகள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
  • கவிதையல்ல, முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு), அண்ணா கவியரங்கம், Pearls (Translation), கவியரங்கில் கலைஞர், கலைஞரின் கவிதைகள், வாழ்வெனும் பாதையில், கலைஞரின் திரை இசைப்பாடல்கள், கலைஞரின் கவிதை மழை, காலப் பேழையும் கவிதைச் சாவியும் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் அவரது கவித்திறமையை வெளிப்படுத்துவன.
  • கலைஞரின் குறளோவியம் மிகவும் புகழ்பெற்ற நூல்; தேனலைகள், சங்கத் தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட தமிழறிஞர்கள் போற்றும் உரை நூல்களையும் படைத்துள்ளார்.
  • உடன்பிறப்புகளுக்குக் கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. 'நெஞ்சுக்கு நீதி' என்னும் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 
  • 1957 முதல் 2018-ஆம் ஆண்டுவரை கலைஞர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தனியொரு மனிதரால் அவரது வாழ்நாள் காலத்தில் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் கலைஞர் அவர்கள்.
  • எண்பதாண்டுகாலம் பொது வாழ்வு, ஐந்துமுறை முதலமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 புதினங்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்கள். 
  • இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார்.
  • மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக 7 கோடியே 76 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார் என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கவையாகும்.
  • இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்து நூல்களும் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும்.

ENGLISH

  • KALAIGNAR KARUNANITHI BIOGRAPHY: The leader of the Tamil community, Muthamizharinagar Kalaignar karunanithi was born on June 3, 1924 in Tirukuwela village, Nagapattinam district, and became a great personality in Tamil Nadu due to his hard work, tremendous talent and Tamil wealth. 
  • Muthamizharinagar Kalaignar karunanithi is not just a name; Tamil's unique address! The key to multi-generational upheaval | A 5-time Chief Minister, 13-time Member of the Legislative Assembly, a great leader who brought about a generational change.
  • He started his literary career as a 14-year-old boy with Tamil sensibilities, at the age of 15 he started his autograph book "Manava Nesan" and at the age of 18, his first essay titled "Adolescence" was published in the "Dravid Nadu" magazine of Perarinjar Anna and received great acclaim. At the age of 20, Tiruvarur founded the Tamil Nadu Tamil Students Forum, a youth revival organization.
  • At the age of 23, Rajakumari wrote his first script for a film. 1942 first published a magazine called "Murasoli"; Later converted to a Monday from 1946 to 1948; Then again in 1953 it started as a Monday in Chennai and in 1960 it became a full-fledged daily. That clarion call is still ringing today.
  • Anarkali, Rising Sun, You Are My Brother, Young Voice, One Kiss, Paper Flower, Socrates, Samrat Asokan, Chilapathikaram - Drama Copies, Cheran Senguttuvan, Thiruvalar Desigam Pillai, Gallows, Poisonous Cup, Nanmanimalai, I Am Wise, Holy Kingdom, Manimakudam, Mahan Parita He has written various dramas including Magan (Ammaiyappan), Mantrikumari.
  • Surulimalai, Turkey, Treasure, One Blood, A Tree Blooms, Arumbu, Big Left Girl, Sarapallam Chamundi, Nadutheru Narayani; Romapurip Pandyan, Ponnar - Shankar Annanmar History, Puli Puli Bandaraka Vannyan, Tenpantich Singham, Thai - Kavyam historical novelties;
  • He has also written short stories such as Sangich Samiyar, Old Man's Dream, Pillaiyo Pillai, Paveavitalul, Motherhood, Nadum Natakami, Naaimai Serial, Badihan Kathaile, Nalaini, Pashkadai, Thenalai, Orumaram Bhoottu, and short stories of M.K.
  • Poems such as Kaviyayalalla, Muttharam (a collection of poems written by a poet in prison), Anna Kaviarangam, Pearls (Translation), Kaviarangil Kaviarangil, Kaviyarangil Kaviyarangil, Kaviyarangil Kaviyarang, Kaviyarangil Kaviyarang, Kaviyarangil Kaviyaalla, Muttharam (a collection of poems written by a poet in prison), Kaviyarangil Kaviyarangil, Jeevan Emanu Patham, Kalaginar's Screen Music, Kaviya Baram's Poem Rain, Kaal Pheya and Kavith Savi are some of his poetry collections.
  • Kuraloviya of the Kalaignar is the most famous book; He has also created text books that are admired by Tamil scholars, including Thenalaigal, Sangath Tamil, Thirukkural kalaignar Text, and Tolkappiya Park.
  • The Kalaiganar's letters to siblings (Party Workers) have been compiled and published in 54 volumes. The Kalaignar biographical book 'Nenjuku Neethi' has been published in 6 volumes. 
  • The Muthamizharinagar Kalaignar karunanithi's speeches in the Assembly from 1957 to 2018 have been published in 12 volumes. He is an artist who has achieved achievements in the world of literature which is surprising as to whether a single person can produce so many literary works in his lifetime.
  • Eighty years of public life, five times as Chief Minister, apart from public work, Muthamizharinagar Kalaignar karunanithi has written stories and screenplays for 75 movies, 15 novels, 20 dramas, 15 short stories and 210 poems. Apart from these, he has also written innumerable editorials in the magazines he worked for.
  • Also, it should be engraved in golden letters that during the tenure of the Chief Minister of Tamil Nadu, Muthamizharinagar Kalainar has nationalized the books of 108 Tamil scholars and has issued an order on behalf of the Government of Tamil Nadu to give 7 crore 76 lakh rupees as royalties to their heirs.
  • As all the books of the incomparable Tamil leader Muthamizharinagar Kalainar have been nationalized, Tamilians living not only in Tamil Nadu but all over the world will have a rare opportunity to read the rich books of Muthamizharinagar Kalainar.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel