பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்
- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.
- தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
- அதன்படி, இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 24, 25) பழநியில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
- இம்மாநாட்டு வளாகத்தில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
- அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அமைச்சர் பெருமக்கள், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
- அதனை தொடர்ந்து மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுகின்றன.
- மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள். அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
- மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
- வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் வைப்பாற்றங்கரையில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில், ஏராளமான பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
- அதன்படி நேற்றைய அகழாய்வில், சூது பவள மணியில் சீரும் திமிலுள்ள காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்றைய ஆய்வில், சுடுமண்ணால் செய்யப்பட்ட திமிலுடைய காளையின் உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், உள்ளிட்ட 1,550-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா(space zone india), 4 குழுமத்துடன் இணைந்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட் உருவாக்கியிருக்கிறது.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1, மூன்று சோதனை செயற்கைக்கோள்களுடன் வானில் ஏவப்பட்டுள்ளது.
- இன்று காலை 7 மணியளவில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து வானில் ஏவப்பட்டது. மேலும், 3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ரீயூசபிள் ராக்கெட், வானில் 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டதாகும்.
- மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி பல முறை செயற்கைக்கோளை ஏவலாம் என கூறப்படுகிறது. இதனால் செலவு மிச்சப்படுத்தலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒருங்கிணைந்த மத்திய துறைத் திட்டமான 'விஞ்ஞான் தாரா' என்ற பெயரில் இணைக்கப்பட்ட மூன்று குடைத் திட்டங்களைத் தொடர ஒப்புதல் அளித்தது.
- 2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதிக்குழு காலத்தில் ஒருங்கிணைந்த திட்டமான 'விஞ்ஞான் தாரா' திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒதுக்கீடு 10,579.84 கோடி ரூபாயாகும்.
- திட்டங்களை ஒரே திட்டமாக இணைப்பது நிதி பயன்பாட்டில் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் துணை திட்டங்கள் / திட்டங்களுக்கு இடையே ஒத்திசைவை ஏற்படுத்தும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (24.08.2024) கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் உயர் செயல்திறன் உயிரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான 'பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி இ3 கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பயோ இ3 (BioE3) எனப்படும் உயிரி் இ3 கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஆராய்ச்சி - மேம்பாடு, தொழில்முனைவோருக்கான புதுமை ஆகியவை அடங்கும்.
- இது உயிரி உற்பத்தி, உயிரி செயற்கை நுண்ணறிவு மையங்கள், உயிரி பவுண்டரி ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வணிகமயமாக்கலையும் துரிதப்படுத்தும்.
- பசுமை வளர்ச்சியை மீட்டுருவாக்கம் செய்யும் உயிரி பொருளாதார மாதிரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இந்த கொள்கை இந்தியாவின் திறமையான தொழிலாளர் சக்தியை விரிவுபடுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.