9th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
- தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரூ.1000 உதவித் தொகை வழங்கினார்.
- பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தொடக்க விழாவுக்கு வரும் முன்பே மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்க நேற்றே உத்தரவிட்டேன் என்று தெரிவித்தார்.
- வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.
- இந்த சட்டத் திருத்த மசோதாவில் வக்ஃபு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.
- ஆனால் இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- பின்னர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைப்படி, மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரீசிலனைக்கு அனுப்பி வைக்க அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒப்புதல் தெரிவித்தார்.
- பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.
- நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் ஐந்தில் தவறிழைத்தார். இரண்டாவது முயற்சியில் அவர் எறிந்த 89.45 மீட்டர் தொலைவே அவருக்குப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.
- கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.