6th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் 5-வது கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
- திட்டக்குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகம், நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் உள்ள 317 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை தொகுத்து வருகிறது. அதன்படி 2024 ஜூன் மாதத்திற்கான குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
- 2024, ஜூன் மாதத்திற்கான அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீடு 1.5 புள்ளி அதிகரித்து 141.4 புள்ளிகளாக இருந்தது.
- 2024 ஜூன் மாதத்திற்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 3.67 சதவீதமாக உள்ளது. இது 2023, ஜூன் மாதத்தில் 5.57 சதவீதமாக இருந்தது
- 2024, ஜூன் மாதத்தில் உணவு மற்றும் பானங்கள் 148.7, பாக்கு, புகையிலை 161.6, துணி மற்றும் காலணி 144.2, வீட்டு வசதி 128.4, எரிபொருள், விளக்கு 148.8, பல்வகை பொருட்கள் 136.3 என மொத்தம் 141.4 புள்ளிகள் அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீடாக இருந்தது.
- கோவை மாவட்டம் சூலூா் விமானப் படை தளத்தில் தரங் சக்தி 2024 விமானப் படையின் கூட்டுப் போர் பயிற்சி ஒருவாரம் நடைபெறுகிறது.
- இந்தியப் பாதுகாப்புத்துறையின் சாா்பில் முப்படைகளின் சாா்பில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- முதன்மை நேட்டோ நாடுகள் மற்றும் இந்திய விமானப்படையும் இணைந்து தரங் சக்தி 2024 என்ற விமானப் படையின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது.
- அதன்படி, சூலூர் விமானப்படை தளத்தில் ஐந்து நாடுகளின் கூட்டு விமானப்படை பயிற்சி இன்று(ஆக.6) துவங்கியது இதில் பல்வேறு வகையான விமானங்கள் ரப்பில் டைப்பூன், தேஜஸ், சுகாய் 30 ஆகிய விமானங்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விமானப்படை வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனர்.
- இந்தப் பயிற்சி கோவை சூலூா் விமான படை தளத்தில் இன்று (ஆக.6) தொடங்கி ஆகஸ்ட்14-ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெற இருக்கிறது.
- நிலக்கரி அமைச்சகம், மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் இணைந்து, இரண்டு முன்னணி மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) மற்றும் கெயில் (இந்தியா) லிமிடெட் இடையே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டு முயற்சி ஒப்பந்தம் இன்று (05.08.2024).
- இந்த ஒப்பந்தம் மேற்பரப்பு நிலக்கரி வாயுமயமாக்கல் (SCG) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரியிலிருந்து செயற்கை இயற்கை எரிவாயு (SNG) எடுக்கும் ஆலையை அமைப்பதற்கான முக்கிய நடவடிக்கையைக் குறிக்கிறது.
- மேற்கு வங்கத்தில் உள்ள ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ராணிகஞ்ச் பகுதியில் அமையவுள்ள இந்த ஆலை, ஒரு மணி நேரத்திற்கு 80,000 என்எம்3 செயற்கை இயற்கை எரிவாயுவை (எஸ்.என்.ஜி) உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. ஆண்டு உற்பத்தி ஒரு மணி நேரத்திற்கு 633.6 மில்லியன் என்எம்3ஆக திட்டமிடப்பட்டுள்ளது.
- இதற்கு 9 மில்லியன் டன் நிலக்கரி. தேவைப்படும். இதற்கான நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் சப்ளை செய்யும். நிலக்கரியின் வேதியியல் பண்புகளைப் பயன்படுத்த உதவும் தேசிய நிலக்கரி வாயுமயமாக்கல் இயக்கத்தை நோக்கிய இரண்டு பெருநிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒரு பெரிய நடவடிக்கையாகும்.
- செயற்கை இயற்கை வாயு (SNG) என்பது ஒரு எரிபொருள் வாயு ஆகும், இது முக்கியமாக மீத்தேன், CH4-ஐ உள்ளடக்கியது, இது பல்வேறு இரசாயனங்கள் மற்றும் உரங்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளாகும்.
- வரவிருக்கும் ஆலை மூலப்பொருளைப் பாதுகாக்கவும், இயற்கை எரிவாயுவின் இறக்குமதி சார்பு நிலையைக் குறைக்கவும், தற்சார்பு இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.
- திரு.டெபாசிஷ் நந்தா, இயக்குநர் (வணிக மேம்பாடு) கோல் இந்தியா மற்றும் கெயில் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் திரு ஆர்.கே.சிங்கால் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.