5th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா
- இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
- ஷேக் ஹசினா மற்றும் அவரது தங்கை ஷேக் ரிஹானா ஆகியோர் பிரதமர் இல்லத்தில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுவிட்டனர்.
- ஷேக் ஹசினா வெளியேற்றத்திற்கு பின்னர் ராணுவ தளபதி ஆற்றிய உரையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் ராணுவ தளபதி உறுதியளித்தார்.
- எனவே, போராட்டத்தை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் எனவும் ராணுவ தளபதி கோரிக்கை வைத்துள்ளார்.
- வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் எனவும் ராணுவ தளபதி பேசியிருக்கிறார். மேலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.
- டெல்லி மாநகராட்சிக்கு 10 உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 உறுப்பினர்களை நியமிக்கும் டெல்லி ஆளுநரின் முடிவுக்கு மாநில அரசின் ஆலோசனையை பெற தேவையில்லை. டெல்லி மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனவும் கூறியுள்ளது.
- டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு டெல்லி மாநகராட்சியில் ஆளும் அரசின் அமைச்சரவையின் ஆலோசனையின்றி 10 நியமன உறுப்பினர்களை நியமிக்கும் உரிமைகள் குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
- இந்த வழக்கு தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு மே 2023 அன்று இந்த தீர்ப்பை ஒத்திவைத்ததிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது
- டெல்லி துணைநிலை ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்றி டெல்லி மாநகராட்சிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்யலாம் என உச்சநீதிமன்ற உறுதி செய்துள்ளது.
- இதன் மூலம் உச்சநீதிமன்றம் துணைநிலை ஆளுநருக்கு உள் அதிகாரத்தை உறுதி செய்தது. டெல்லி அரசு அல்லது அமைச்சரவை குழு ஆகியவற்றின் ஆலோசனை அல்லது கருத்துக்களை துணை நிலையாளர் கட்டாயமாக கேட்க வேண்டும் என்று அவசியமில்லை என தெரிவித்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே செய்யப்பட்ட சட்ட திருத்தம் இதை திட்ட வட்டமாக கூறுவதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.