நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழக அரசு ஒப்பந்தம்
- அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
- இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை இந்த நிறுவனங்கள் மேம்படுத்தும்.
- இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கும் எட்டப்படும்.
- ரூ. 450 கோடி முதலீட்டில் நோக்கியா நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளும், யீல்ட் என்ஜினீயரிங் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கோயம்புத்தூரில் ரூ. 150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தித் தொழிற்சாலையும் 300 பேருக்கு வேலைவாய்ப்புகளும், சென்னையில் கீக்மைண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் 500 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
- இதில் 3,254 பொருள்கள் கண்டறியப்பட்டு, அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டது. இதே பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கியது.
- இரண்டாம் கட்ட அகழாய்வில் மட்டும் 984 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
- இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- இந்த அகழ்வாராய்ச்சியில், கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
- இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, அலங்கரிக்கப்பட்ட முழு சங்கு வளையல் கண்டறியப்பட்டது.
- இதன்மூலம் சங்கு வளையல்களை அலங்கரித்து மெருகேற்றம் செய்யும் கூடம் இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா். மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை 1600 தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- இந்திய கடற்படை 17 நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கிறது. இவற்றில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரத்தின் மூலம் இயங்குகின்றன.
- இவற்றில் ஆறு கப்பல்கள் ரஷ்யாவின் கிலோ வகையைச் சேர்ந்தவை. நான்கு கப்பல்கள் ஜெர்மனியின் எச்.டி.டபிள் ரகத்தைச் சேர்ந்தவை. இன்னொரு ஆறு கப்பல்கள் பிரான்சின் ஸ்கார் பீன் ரகத்தைச் சேர்ந்தவை.
- அணுசக்தியில் இயங்கும் ஒரே நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிஹந்த் 2018ஆம் ஆண்டு இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 83 மெகாவாட் திறன் கொண்ட அணு உலையை உள்ளடக்கிய இந்தக் கப்பலில் இருந்து அணு ஏவுகணைகளை ஏவ முடியும்.
- அதேபோன்ற இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிகாட் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. 6,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 750 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கைத் தாக்கும் கே-15 ஏவுகணையைக் கொண்டிருக்கிறது.
- இந்தக் கப்பலின் பரிசோதனைகள் முடிவடைந்தை அடுத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐஎன்எஸ் அரிகாட் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- இந்தியாவும் மலேசியாவும் மிக நெருக்கமான அரசியல், பொருளாதார, சமூக-கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்திய சுற்றுலா அமைச்சகமும் மலேசிய அரசின் சுற்றுலா, கலை கலாச்சார அமைச்சகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 ஆகஸ்ட் 20 அன்று இந்தியாவின் சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மலேசியாவின் சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் திரு ஒய் பி டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் ஆகியோரிடையே கையெழுத்தானது.
- தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் 2023 - 24 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 3.7 சதவிகிதமாக இருந்த விவசாயத் துறை 2 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- எனினும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 5 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
- நிதி, ரியல் எஸ்டேட், தொழில்முறை சேவைகளின் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பின் விரிவாக்கம் கடந்தாண்டின் காலாண்டில் 12.6 சதவிகிதத்திலிருந்து 7.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
- 2024 - 25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 43.64 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2023 - 24 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 40.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
- இதன்மூலம், 6.7 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது. மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்கல், பிற பயன்பாட்டு சேவைகள் 3.2 சதவிகிதத்திலிருந்து 10.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பிரிவு ஒரு வருடத்திற்கு முன்பு 8.6 சதவிகிதத்திலிருந்து 10.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது.
- வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் ஒரு வருடத்திற்கு முன்பு 9.7 சதவிகிதத்திலிருந்து 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.