26th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
செஞ்சி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
- விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை உள்ளது. இங்கு தொல்லியல் கழக நிறுவனர் லெனின், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமி, வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செஞ்சிக்கோட்டை கிருஷ்ணகிரி மலைக்கோட்டையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
- அதில், அங்குள்ள ராஜகோபாலசுவாமி கோயில் வாயில் படியில் கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
- செஞ்சி கோட்டையை முதலில் கட்டியவர் ஆனந்த கோன். அது தற்போது ராஜகிரி என அழைக்கப்படுகிறது.
- 2வதாக கிருஷ்ணகிரி கோட்டையை கிருஷ்ண கோன் கட்டினார். அடுத்து அவர்களின் வாரிசுகளான கோனேரிக் கோன், கோவிந்தக்கோன், புலியக்கோன் ஆகியோர் கோட்டையை விரிவுப்படுத்தினர். இவர்களின் காலம் கி.பி. 1200 முதல் துவங்கி கி.பி. 1330 வரை 130 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
- இந்த தகவல்களை கர்நாடக ராஜாக்கள் மற்றும் நாராயணன் என்பவர் எழுதிய நூல்களிலும் அண்ணாமலை பல்கலை வரலாற்று பேராசிரியர் சீனிவாச்சாரி இந்திய தொல்லியல் துறை ஓய்வுபெற்ற அலுவலர் சேஷாத்திரியும் உறுதி செய்துள்ளனர்.
- இருப்பினும் இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. தற்போது செஞ்சியில் உள்ள கிருஷ்ணகிரி கோட்டையில் கிடைத்துள்ள கல்வெட்டில் இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கல்வெட்டில் உள்ள எழுத்தின் பொருள் கோனேரிக்கோன் மகன் கோவிந்தன் சதா இறைவனை வணங்கிய நிலையில் உள்ளார் என்பதாகும்.
- கோனேரி கோன் செஞ்சிக்கோட்டையை கி.பி. 1270 முதல் கி.பி. 1290 வரை ஆட்சி செய்துள்ளார். அவர் காலத்தில் இந்த கல்வெட்டு வடிக்கப்பட்டுள்ளது.
- இந்த கல்வெட்டின் மூலம் செஞ்சிக்கோட்டையை கட்டியவர்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ள தகவல்களுக்கு உரிய கல்வெட்டு ஆதாரம் முதல் முறையாக கிடைத்துள்ளது.
- கடலூா் மாவட்டம், வாழப்பட்டு தென்பெண்ணை பகுதியில் அண்மையில் மேற்புற களஆய்வு மேற்கொண்டோம். அப்போது, சிதைந்த முதுமக்கள் தாழிகள், சுடுமண் பொம்மை, வட்டச் சில்லுகள், கெண்டி மூக்குகள், உடைந்த அகல் விளக்கு, ராஜராஜன் காலத்து செப்பு நாணயம், ஆங்கிலேயா் காலத்து செப்பு நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
- புதுதில்லியில் உள்ள உத்யோக் பவனில் இன்று தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் 8-வது அதிகாரமளிக்கப்பட்ட திட்டக் குழு கூட்டத்திற்கு ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்கினார்.
- 'தொழில்நுட்ப ஜவுளித் துறையில் ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்களிடையே ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான மானியம் (கிரேட்)' திட்டத்தின் கீழ், தலா 50 லட்சம் ரூபாய் மானியத்துடன் 4 புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- 'தொழில்நுட்ப ஜவுளியில் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் பொது வழிகாட்டுதல்களின்' கீழ், தொழில்நுட்ப ஜவுளித்துறையில் படிப்புகளை அறிமுகப்படுத்த 5 கல்வி நிறுவனங்களுக்கு சுமார் 20 கோடி ரூபாய் மானியம் வழங்கவும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் திட்டங்கள் கூட்டுத்தொகை, நீடித்த ஜவுளி மற்றும் ஸ்மார்ட் ஜவுளி ஆகிய முக்கிய உத்தி சார்ந்த தளங்களில் கவனம் செலுத்துகின்றன.
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் புதிய பி.டெக் படிப்புகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதோடு புவி சார்ந்த ஜவுளி, புவி சார்ந்த சிந்தடிக்ஸ், கலவைகள், கட்டுமான கட்டமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஜவுளி பயன்பாடுகள் போன்றவையும் இதில் அடங்கும்.