25th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்
- ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று (25.08.2024) ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
- ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பு 75 ஆண்டுகளை நிறைவு செய்யும் நேரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்று கூறினார்.
- பல மகத்தான ஆளுமைகளின் நீதி, நேர்மை அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் இது என்று பிரதமர் கூறினார்.
- ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் பகாடே, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, மத்திய சட்டம் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), திரு அர்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்ற நீதிபதி திரு சஞ்சீவ் கண்ணா, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
- கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், ஜம்மு காஷ்மீர் மாநிலமானது லாடாக் மற்றும் ஜம்மு - காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
- லடாக்கைப் பொறுத்தவரை, லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இருந்தது. யூனியன் பிரதேசமாக இருப்பதால்,லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
- இந்த சூழலில்,தற்போது லடாக் யூனியன் பிரதேசத்தில் புதியதாக சன்ஸ்கர், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் என்ற 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.