Type Here to Get Search Results !

என்ஐஆர்எஃப் தரவரிசை 2024 / சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் 2024 / NIRF RANKING 2024

  • என்ஐஆர்எஃப் தரவரிசை 2024 / சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் 2024 / NIRF RANKING 2024: தேசிய அங்கீகார வாரியம் (என்பிஏ) மற்றும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) நடத்திய தரவரிசையில் சென்னை ஐஐடி நாட்டின் ஒட்டுமொத்தப் பிரிவில் சிறந்த கல்வி நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • சென்னை ஐஐடி-யைத் தொடர்ந்து, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) - பெங்களூரு மற்றும் மும்பை ஐஐடி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
  • ஆராய்ச்சிப் பிரிவுக்கான சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் பிரிவிலும் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
  • மேலாண்மை பிரிவில் அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) முதல் இடத்தையும், ஐஐஎம் பெங்களூரு இரண்டாவது இடத்தையும், ஐஐஎம் கோழிக்கோடு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 
  • பொறியியல் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், ஐஐடி டெல்லி மற்றும் ஐஐடி மும்பை ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. 
  • சிறந்த சட்ட நிறுவனம் பிரிவில் பெங்களூரில் உள்ள தேசிய சட்டப் பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
  • மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ் முதல் இடத்தையும், பல் மருத்துவப் பிரிவில் சென்னையின் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்சஸ் முதலிடத்தையும் பிடித்துள்ளன. மேலும் சிறந்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி 3வது இடத்தை பிடித்துள்ளது.
  • சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் சிறந்த மாநில பொது பல்கலைக்கழகமாக தேர்வாகி உள்ளது. இரண்டாவது இடத்தை கொல்கத்தாவில் உள்ள ஜாதவாபூர் பல்கலைக்கழகமும், மூன்றாவது இடத்தை புனேவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. அதே போன்று கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) சிறந்த திறந்தநிலை பல்கலைக்கழகமாகவும், புனேவில் உள்ள சிம்பயோசிஸ் ஸ்கூல் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் சிறந்த திறன் பல்கலைக்கழகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த கல்லூரியாகத் தேர்வு செய்யப்பட்டு முதல் தரவரிசைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி 2ஆம் இடமும், டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரி 3ஆம் இடமும் பெற்றுள்ளன. அந்த வகையில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இதே பிரிவில் சென்னை லயோலா கல்லூரி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

ENGLISH

  • NIRF RANKING 2024: IIT Chennai has been ranked as the best educational institution in the overall category in the country in the rankings conducted by National Board of Accreditation (NBA) and National Institute Ranking Framework (NIRF).
  • Following IIT Chennai, Indian Institute of Science (IISC) Bengaluru and IIT Mumbai are ranked second and third respectively.
  • The Indian Institute of Science, Bengaluru has topped the list of top institutes for research. Institute of Science Bangalore has topped the universities category as well. Jawaharlal Nehru University (JNU) and Jamia Millia Islamia University are ranked second and third respectively.
  • In the management category, Indian Institute of Management (IIM), Ahmedabad has bagged the first position, followed by IIM Bengaluru in second position and IIM Kozhikode in third position.
  • In the engineering category, IIT Chennai is ranked first, followed by IIT Delhi and IIT Mumbai, second and third respectively.
  • National Law School, Bangalore has topped the Best Law Institute category.
  • AIIMS Delhi topped the medical category and Savita Institute of Medical and Technical Sciences, Chennai topped the dental category. Also in the list of best medical colleges is Vellore CMC. Medical College is ranked 3rd.
  • Anna University in Chennai has been selected as the best state public university. Jadavapur University in Kolkata is second and Savitribai Phule University in Pune is third. Similarly, Coimbatore Bharatiyar University is ranked 8th. Vellore VIT The university is ranked 10th.
  • Indira Gandhi National Open University (IGNOU) has been adjudged the Best Open University and Symbiosis School of Communications, Pune, has been declared the Best Capacity University.
  • In the list of best arts and science colleges, Delhi University's Hindu College has been selected as the best college in the country and has been ranked first. It was followed by Miranda House College, Delhi at 2nd place and St. Stephen's College, Delhi at 3rd place. In that way Coimbatore PSGR. Krishnammal College is ranked 7th. In the same category, Loyola College, Chennai is ranked 8th.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel