Type Here to Get Search Results !

16th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


16th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தாய்லாந்தின் 31வது பிரதமராக பேடோங்டார்ன் ஷினவத்ரா தேர்வு
  • நெறிமுறைகளை மீறியதற்காக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை தாய்லாந்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
  • 37 வயதில், தாய்லாந்தின் வரலாற்றில் இரண்டாவது பெண் பிரதமராகவும், இளம்பிரதமராகவும் பதவியேற்கவுள்ளார் ஷினவத்ரா. 
EOS 08 செயற்கை கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன EOS 08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 
  • EOS 08 செயற்கைக்கோளில் 3 ஆராய்ச்சிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் ஓராண்டு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • EOS 08 செயற்கைக்கோள், சிறிய ரக SSLV D3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
  • SSLV D3 ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடங்களில், 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில், செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. 
  • இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும் என்றும், பேரிடர், சுற்றுச்சூழல், தீ போன்றவற்றை கண்காணிக்க பயனுள்ளதாக இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel