2024 ஜூலை மாதத்திற்கான நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்
- 2024 ஜூலை மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (2012=100 என்ற அடிப்படையில்) சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பணவீக்க விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 59 மாதங்களில் மிகவும் குறைவானதாகும்.
- அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2024 ஜூலை மாதத்தில் 3.54% (தற்காலிகமானது) ஆகும். அதனுடன் தொடர்புடைய பணவீக்க விகிதம் கிராமப்புறங்களில் 4.10% ஆகும். நகர்ப்புறங்களில் இது 2.98% ஆகும்.
- 2024 ஜூலை மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் 2023 ஜூன் மாதத்திற்குப் பின் மிகவும் குறைவானதாக இருந்தது. அகில இந்திய நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2024 ஜூலை மாதத்தில் 5.42% (தற்காலிகமானது) ஆகும். கிராமப்புறங்களில் பணவீக்க விகிதம் 5.89% ஆகவும், நகர்ப்புறங்களில் பணவீக்க விகிதம் 4.63% ஆகவும் இருந்தது.
- 2024 ஜூலை மாதத்தில் அனைத்து பிரிவுகளுக்கும் பணவீக்கம் குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருட்கள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் இருந்து விலைத் தரவுகள் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் களச் செயல்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த களப் பணியாளர்களின் வாராந்தர கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படுகின்றன.
- 2024 ஜூலை மாதத்தில், தேசிய புள்ளியியல் அலுவலகம் 100% கிராமங்கள், 98.5% நகர்ப்புற சந்தைகளில் இருந்து விலை விவரங்களை திரட்டியது.
- அதே நேரத்தில் சந்தை வாரியான விலை விவரங்கள் கிராமப்புறங்களுக்கு 88.71% ஆகவும், நகர்ப்புறங்களுக்கு 92.64% ஆகவும் இருந்தன.
- 2024 ஜூன் மாதத்திற்கு, அடிப்படை 2011-12 உடன் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் 2023 ஜூன் மாதத்தில் 143.9-க்கு எதிராக 150.0 ஆக உள்ளது. 2024, ஜூன் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 134.9, 145.3 மற்றும் 222.8 ஆக உள்ளன.
- பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி, 2024, ஜூன் மாதத்தில் முதன்மை பொருட்களுக்கு 156.0, மூலதன பொருட்களுக்கு 110.0, இடைநிலை பொருட்களுக்கு 159.0 மற்றும் உள்கட்டமைப்பு / கட்டுமான பொருட்களுக்கு 178.4 குறியீடுகள் உள்ளன.
- மேலும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத நீடித்த பொருட்களுக்கான குறியீடுகள் 2024, ஜூன் மாதத்தில் முறையே 126.9 மற்றும் 144.6 ஆக உள்ளன.
- 2024 ஜூன் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 4.2 சதவீதமாகும்.
- 2023, ஜூன் மாதத்தை விட 2024 ஜூன் மாதத்தில் பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியின் தொடர்புடைய வளர்ச்சி விகிதங்கள் முதன்மை பொருட்களில் 6.3 சதவீதம், மூலதன பொருட்களில் 2.4 சதவீதம், இடைநிலை பொருட்களில் 3.1 சதவீதம், உள்கட்டமைப்பு/ கட்டுமான பொருட்களில் 4.4 சதவீதம், நுகர்வோர் சாதனங்களில் 8.6 சதவீதம் மற்றும் நுகர்வோர் நீடித்தவற்றில் -1.4 சதவீதம் ஆகும்.
- விக்ரம் லேண்டரின் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை நிறைவேற்றி, தென் துருவத்திற்கு அருகில் சந்திரனின் மேற்பரப்பில் பிரக்யான் ரோவரை நிலைநிறுத்திய சந்திரயான்-3-ன் மிகச் சிறந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக மத்திய அரசு ஆகஸ்ட் 23-ந் தேதியை "தேசிய விண்வெளி தினமாக" அறிவித்துள்ளது.
- இந்த வரலாற்று சாதனை விண்வெளியில் பயணிக்கும் நாடுகளின் ஒரு உயரடுக்கு குழுவில் இந்தியாவை வைத்துள்ளது. இந்தத் தரையிறக்கத்தின் மூலம் சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
- விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தச் சாதனை 2024-ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- இந்தியா-இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சியின் 10 வது பதிப்பு மித்ரா சக்தி இன்று இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் தொடங்கியது. இந்த பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- 106 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், ராஜ்புதனா ரைபிள்ஸ் பட்டாலியன் மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் சேவைகளைச் சேர்ந்த வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
- இலங்கை படைப்பிரிவில் இலங்கை ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டின் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டுப் பயிற்சி மித்ரா சக்தி என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடைசி பதிப்பு நவம்பர் 2023 இல் புனேயில் நடத்தப்பட்டது.
- ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளையின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ் துணை மரபுசார் சூழ்நிலையில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தரப்பினரின் கூட்டு ராணுவ திறனை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். இந்தப் பயிற்சி அரை நகர்ப்புற சூழலில் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும்.
- 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.
- இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவுற்றன. பாரிஸில் உள்ள ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழாவை 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து கண்டுகளித்தனர்.
- நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீ ஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.
- ஒலிம்பிக் சின்னமான 5 வளையங்கள் வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டன. வெனிஸ் கடற்கரையில் ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ், பில்லி எலிஷ், ஸ்னூப் டோக் மற்றும் டாக்டர் ட்ரே உள்ளிட்டோரின் இசைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- அக்ரோபாட்ஸ், சர்க்கஸ் நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. 5 முறை கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகியான கேப்ரியெல்லா சர்மியெண்டோ வில்சன் என்று அழைக்கப்படும் ஹெச்.இ.ஆர். தேசிய கீதத்தை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
- தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான சுடர் அணைக்கப்பட்டது. பின்பு, மைதானத்தின் கூரையில் இருந்து குதித்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி ஒலிம்பிக் கொடியை ஏந்திச் சென்று, 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ்சிடம் ஒப்படைத்தார்.
- விழாவின் கடைசி நிகழச்சியாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
- இதையடுத்து மைதானத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை இரவை பகலாக்கி பிரமிப்பை ஏற்படுத்தியது. விழாவில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரின் மனைவி பிரிகிட் மேக்ரான், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் மற்றும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவின் தலைவர் டோனி ஸ்டான்குவெட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 126 பதக்கங்களுடன் (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) முதலிடம் பிடித்துள்ளது. சீனா 91 பதக்கங்களுடன் (40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம்) இரண்டாவது இடத்தில் உள்ளது.
- 20 தங்கம் உட்பட மொத்தம் 45 பதக்கங்களைப் பெற்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன.
- இந்த ஒலிம்பிக்கில், இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றி 71-வது இடத்தைப் பிடித்தது.
- ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன், இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் இடம்பெற்றனர்.
- இவர்கள் மூவரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை வென்றுள்ளார்.