11th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சதுரங்க ஆட்ட காய்கள் கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, 1250க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- தவிர அதிக அளவிலான உடைந்த நிலையில் பழங்கால செங்கற்கள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சுடு மண்ணால் ஆன சதுரங்க ஆட்ட காய்கள் கண்டெடுக்கப்பட்டன.
- புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
- இந்த நிகழ்ச்சியின்போது விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். பிரதமர் வெளியிட்ட 61 பயிர்களில் 109 ரகங்களில் 34 வயல் பயிர்கள் மற்றும் 27 தோட்டக்கலை பயிர்கள் அடங்கும்.