10th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6-வது பதக்கம்
- ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ரெய் ஹிகுச்சியிடம் இந்திய வீரர் அமன் ஷெராவத் தோல்வியைத் தழுவினார்.
- இதையடுத்து வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸ் உடன் அமன் ஷெராவத் மோதினார்.
- ஆறு நிமிட முடிவில் 13-5 என்ற கணக்கில் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார் அமன் ஷெராவத். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம், மும்பை செம்பூரில் என்.ஜி. ஆச்சார்யா மற்றும் டி.கோ. மராத்தா எனும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த மே1ம் தேதி ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் இந்தக் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
- இதனால், அந்த கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், கல்லூரி முதல்வரிடம் விசாரித்தபோது, 'இந்த கல்லூரியில் மாணவ, மாணவிகள் மத அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடைகள் அணிவதற்கு ஆடை கட்டுப்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. எனவே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றுதெரிவித்தார்.
- மேலும், என்.ஜி. ஆச்சார்யா மற்றும் டி.கோ. மராத்தா எனும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடம்பெற்றுள்ள அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் ஒரு இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- கல்லூரியின் இந்த முடிவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், ' மாணவ மாணவிகளிடம் ஒரே மாதிரியான ஆடைக் குறியீட்டை அமல்படுத்துவதற்கும் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் கல்லூரி நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது இதனை அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கருத முடியாது' என்று தீர்ப்பளித்தது.
- இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
- அப்போது நீதிபதிகள், 'பொட்டு, திலகம் வைக்க வேண்டாம் என உங்களால் கூற முடியுமா? அதற்கு தடை விதிக்க முடியுமா?. பெயரிலேயே மதத்தை கண்டுபிடித்து விடலாமே? அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா?.
- பெண் மாணவிகள் தாங்கள் அணியும் உடையில் தேர்வு சுதந்திரம் இருக்க வேண்டும், கல்லூரி அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. நாட்டில் பல மதங்கள் உள்ளன என்பதை அறிந்து நீங்கள் திடீரென்று விழித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
- மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும்' எனத் தெரிவித்து ஹிஜாப் அணியத் தடை விதித்த மும்பை கல்லூரியின் உத்தரவை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.
- ஆனாலும், வகுப்பறைக்குள் பெண்கள் ஹிஜாப் அணிவதை அனுமதிக்க முடியாது என்றும், வளாகத்தில் மத நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- உயிரி எரிபொருள் துறையில் சமீபத்திய வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும், அதிக முதலீடுகளை ஈர்க்கவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் ஜி-வன் யோஜனா திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- மாற்றியமைக்கப்பட்ட திட்டம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2028-29 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- லிக்னோசெல்லுலோசிக் மூலப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மேம்பட்ட உயிரி எரிபொருள்களை உள்ளடக்கியது இதுவாகும்.
- அதாவது விவசாய, வனவியல் எச்சங்கள், தொழில்துறை கழிவுகள், தொகுப்பு வாயு, ஆல்கா போன்றவற்றின் மூலமான திட்டமாகும். "போல்ட் ஆன்" ஆலைகள், "பிரவுன்ஃபீல்ட் திட்டங்கள்" இப்போது தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தவும் அவற்றின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் தகுதி பெறும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இதன்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மூலம் 1 கோடி நகர்ப்புற ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு 5 ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடு கட்டவோ, வாங்கவோ நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ரூ. 2.30 லட்சம் கோடி அரசு உதவி வழங்கப்படும்.
- நகர்ப்புறங்களில் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற நிலையான வீடுகளை வழங்குவதற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்படும் முக்கிய முன்னோடித் திட்டங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம் ஒன்றாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் கிராம்ப்புற வீட்டுவசதித் திட்டத்தை 2024-25 முதல் 2028-29-ம் நிதியாண்டு வரையிலான நிதியாண்டில் செயல்படுத்தும் ஊரக வளர்ச்சித் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கப்படும்.
- 2024-25 முதல் 2028-29 வரையிலான நிதியாண்டிற்கான மொத்த ஒதுக்கீடு 3,06,137 கோடி ரூபாய். இதில் மத்திய அரசின் பங்கு 2,05,856 கோடி ரூபாய், மாநில அரசின் பங்களிப்பு 1,00,281 கோடி ரூபாய் ஆக இருக்கும்.
- மாற்றியமைக்கப்பட்ட விலக்கு அளவுகோல்களைப் பயன்படுத்தி தகுதியான கிராமப்புற குடும்பங்களை அடையாளம் காண ஆவாஸ்+ பட்டியலைப் புதுப்பித்தல்.
- பயனாளிகளுக்கான உதவித் தொகை சமவெளிப் பகுதிகளில் தற்போதுள்ள விகிதங்களில் ரூ.1.20 லட்சமாகவும், வடகிழக்கு மண்டலம் / மலை மாநிலங்களில் ரூ.1.30 லட்சமாகவும் தொடரும்.
- திட்ட நிதிகளில் 2% நிர்வாக நிதிகள் 1.70% மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் 0.30% மத்திய அளவில் தக்கவைக்கப்பட வேண்டும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் முன்மொழிந்த தூய்மையான தாவரத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- ரூ.1,765.67 கோடி கணிசமான முதலீட்டுடன், இந்த முன்னோடி முயற்சி, இந்தியாவில் தோட்டக்கலைத் துறையில் புரட்சியை ஏற்படுத்த உள்ளதுடன், சிறப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான புதிய தரங்களை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 2023 இல் நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் இது அறிவிக்கப்பட்டது.
- வைரஸ் இல்லாத, உயர்தர நடவுப் பொருட்களுக்கான அணுகலை இது வழங்கும். இது பயிர் விளைச்சல் மற்றும் மேம்பட்ட வருமான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
- நெறிப்படுத்தப்பட்ட சான்றிதழ் செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவு ஆகியவை நாற்றங்கால்களை சுத்தமான நடவுப் பொருட்களை திறம்பட பரப்பவும், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 24,657 கோடி ரூபாய் (தோராயமாக) மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் எட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- புதிய வழித்தட முன்மொழிவுகள் நேரடி இணைப்பை வழங்குவதுடன், நகர்வை மேம்படுத்துவதுடன், இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மையை வழங்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் உள்ளன. இது இப்பகுதியில் உள்ள மக்களை "தற்சார்பாளர்" ஆக மாற்றி, இப்பகுதியில் விரிவான வளர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களின் வேலைவாய்ப்பு / சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்.
- இந்தத் திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் விளைவாக உருவானவை. இவை ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளன. மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.