Type Here to Get Search Results !

சம்பூர்ணதா அபியான் இயக்கம் / SAMPOORNATA ABHIYAN

  • சம்பூர்ணதா அபியான் இயக்கம் / SAMPOORNATA ABHIYAN: நாடு முழுவதும் உள்ள முன்னேற விரும்பும் மாவட்டங்களில் 6 முக்கிய குறியீடுகளையும், முன்னேற விரும்பும் வட்டங்களில் 6 முக்கிய குறியீடுகளையும் அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சியை நித்தி ஆயோக் மேற்கொள்கிறது. 
  • இதன் ஒரு பகுதியாக  ஜூலை 4, 2024 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை 'சம்பூர்ணாத அபியான்' என்ற 3 மாத இயக்கத்தை நித்தி ஆயோக் தொடங்குகிறது.
  • சம்பூர்ணதா இயக்கம் 112 முன்னேற விரும்பும் 500 வட்டாரங்களில் அடையாளம் காணப்பட்ட 6 குறியீடுகளில் செறிவூட்டலை அடையும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில், வட்ட அளவில் கவனம் செலுத்தப்படும் 6 குறியீடுகள்

  • கர்ப்பகால கவனிப்புக்காக பதிவு செய்யும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  • நீரிழிவு நோய்க்கு பரிசோதனை செய்பவர்களின் விழுக்காடு
  • ரத்த அழுத்த பரிசோதனை விழுக்காடு
  • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இணை உணவு உட்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  • மண் மாதிரி சேகரிப்பு இலக்கில் உருவாக்கப்பட்ட மண்வள அட்டைகளின் சதவீதம்
  • வட்டத்திலுள்ள மொத்த சுய உதவிக் குழுக்களில் சுழல் நிதி பெற்ற சுய உதவிக் குழுக்களின் விழுக்காடு

'சம்பூர்ணதா அபியான்' இயக்கத்தின் கீழ் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட 6 குறியீடுகள்

  • கர்ப்பகால கவனிப்புக்காக பதிவு செய்த கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இணை உணவு உட்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம்
  • முழுமையாக நோய்த்தடுப்பூவி செய்யப்பட்ட குழந்தைகளின் சதவீதம்
  • வழங்கப்பட்ட மண்வள அட்டைகளின் எண்ணிக்கை
  • இடைநிலைக் கல்வியில் மின்சார வசதி உள்ள பள்ளிகளின் விழுக்காடு
  • கல்வி தொடங்கிய 1 மாதத்திற்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் பள்ளிகளின் விழுக்காடு
  • நாட்டின் பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக 112 மாவட்டங்களை உள்ளடக்கிய முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 
  • மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய குறிகாட்டிகளை மேம்படுத்துவதில் இத்திட்டம் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  • இதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, முன்னேற விரும்பும் வட்டங்கள் திட்டம் 2023-ம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் அத்தியாவசிய சேவைகளில் செறிவூட்டலை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ENGLISH

  • SAMPOORNATA ABHIYAN: NITI Aayog is launching ‘Sampoornata Abhiyan’, a 3-month campaign from 4th July – 30th September 2024, to undertake a sustained effort to achieve saturation of 6 key indicators in Aspirational Districts and 6 key indicators in Aspirational Blocks across the country. 
  • ‘Sampoornata Abhiyan’ seeks to achieve saturation in each of the 6 identified indicators in the 112 Aspirational Districts and 500 Aspirational Blocks under the Aspirational Districts Programme and Aspirational Blocks Programme.

‘Sampoornata Abhiyan’ will focus on the following 6 identified KPIs across all Aspirational Blocks

  • Percentage of pregnant women registered for Antenatal Care (ANC) within the first trimester
  • Percentage of persons screened for Diabetes against the targeted population in the Block
  • Percentage of persons screened for Hypertension against the targeted population in the Block
  • Percentage of pregnant women taking Supplementary Nutrition under the ICDS Programme regularly
  • Percentage of Soil Health Cards generated against the soil sample collection target
  • Percentage of SHGs that have received a Revolving Fund against the total SHGs in the block

6 identified KPIs across Aspirational Districts under ‘Sampoornata Abhiyan’

  • Percentage of pregnant women registered for Antenatal Care (ANC) within the first trimester
  • Percentage of pregnant women taking Supplementary Nutrition under the ICDS Programme regularly
  • Percentage of children fully immunized (9-11 months) (BCG+DPT3+OPV3+Measles 1)
  • Number of Soil Health Cards distributed
  • Percentage of schools with functional electricity at the secondary level
  • Percentage of schools providing textbooks to children within 1 month of the start of the academic session
  • NITI Aayog is providing a list of activities that districts and blocks can organize as part of the ‘Sampoornata Abhiyan’ launch. Additionally, blocks and districts are being encouraged to regularly conduct outreach activities to maintain the campaign's momentum and foster ongoing participation.

To make this effort successful and to deliver a tangible impact on the ground

  • Districts/Blocks will develop a 3-month Action Plan to saturate the six indicators
  • Districts/Blocks will track progress on saturation each month
  • Implement awareness and behavior change campaigns
  • District officials will conduct concurrent monitoring field visits
  • NITI Aayog, in collaboration with the relevant Central Ministries and Departments, as well as the Governments of States and Union Territories, will work together to ensure the effective and rapid development of these Districts and Blocks. This collaboration will focus on improved planning and implementation, capacity building, and establishing systems for enhanced and sustainable service delivery.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel