
3rd JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கீழடி அகழாய்வில் மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுப்பு
- கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது.
- இந்த அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
- இந்த நிலையில், திங்கள்கிழமை மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரு ஓடுகளின் நீளம், அகலம் முறையே 4.5 செ.மீ., 4.3 செ.மீ.
- நிதி ஒதுக்குவதில் கேரள மாநில பஞ்சாயத்துக்களுக்கு 15-வது நிதிக் குழுவால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
- 2015-16 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில், 14-வது நிதிக்குழு கேரள மாநில பஞ்சாயத்துக்களுக்கு ரூ.3,774.20 கோடியை வழங்கியது. அதே சமயம் 15-வது நிதிக்குழுவின் மானியமாக இந்தப் பஞ்சாயத்துகளுக்கு 2020-21 முதல் 2026-27 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.5,337 கோடி (28.06.2024 நிலவரப்படி) வழங்கப்பட்டுள்ளது.
- 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநில அரசுகள், மாநில நிதிக்குழுவை அமைப்பது கட்டாயமாகும். 2024-ம் ஆண்டு ஜூன் 11, ஜூன் 24 ஆகிய தேதிகளில் மாநில நிதிக்குழுக்களின் விவரங்களைக் கேட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
- ஆனால் கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை 28-ம் தேதி வரை இது குறித்த எந்தப் பதிலையும் மாநிலத்திடமிருந்து பெறப்படவில்லை என அமைச்சகம் கூறியுள்ளது.
- சென்செக்ஸ், இதுவரை இல்லாத வகையில் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டியும் உச்சத்தில் இருக்கிறது.காலை 9: 15 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை 0.72 % உயர்வை சந்தித்து 80,013.77 ஆகவும் நிப்டி 0.7 % உயர்ந்து 24,291. 75 ஆகவும் வர்த்தமானது.
- எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் உயர்வு காரணமாக நிப்டியும் உயர்வை சந்தித்தது. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளும் உயர்வை சந்தித்தன.
- இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 16-வது பதிப்பு மேகாலயா மாநிலம் உம்ரோயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று (03.07.2024) தொடங்கியது. இந்த பயிற்சி 2024 ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- 45 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில், சிக்கிம் சாரணர் இயக்கத்தின் ஒரு பிரிவு மற்றும் பிற ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.
- மங்கோலிய ராணுவத்தின் சார்பில் அந்நாட்டின் 150 விரைவு அதிரடிப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நோமாடிக் எலிபெண்ட் பயிற்சி என்பது இந்தியாவிலும், மங்கோலியாவிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடந்த முறை இந்தப் பயிற்சி ஜூலை 2023-ல் மங்கோலியாவில் நடத்தப்பட்டது.
- இந்த ஆண்டு இந்தப் பயிற்சியின் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான மங்கோலிய தூதர் திரு தம்பஜவின் கன்போல்ட் மற்றும் இந்திய ராணுவத்தின் 51 துணைப் பகுதி கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்னா ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுதல், தேடுதல் நடவடிக்கைகள் ட்ரோன்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை இந்த ஆண்டு பயிற்சியில் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகிறது.
- மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த 'எகானமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்' பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து செபெக்ஸ் 2 என்ற புதிய வெடிகுண்டை தயாரித்து உள்ளது.
- இதுஉலகின் மிக சக்திவாய்ந்த வெடிகுண்டுகளில் ஒன்றாகும். டிஎன்டி வெடிகுண்டைவிட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- இந்த வகை வெடிகுண்டுகளை பிரம்மோஸ் ஏவுகணை உட்பட இந்தியாவின் அனைத்து வகை ஏவுகணைகளிலும் பயன்படுத்த முடியும். பீரங்கி, போர் விமானம், போர்க்கப்பல், நீர்மூழ்கியில் இருந்தும் தாக்குதல் நடத்த முடியும்.
- டிஎன்டி வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2 வெடிகுண்டில் 20 %அளவுக்கு அதிக வெப்பம் வெளியாகிறது. குண்டு வெடித்து சிதறும்போது ஏற்படும் விட்டம் 35 மடங்கு அதிகமாக இருக்கிறது. டிஎன்டி வெடிகுண்டைவிட செபெக்ஸ் 2-வின் பாதிப்பு 28% அதிகமாக உள்ளது.
- மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
- இந்த நிலையில் தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர், கூடுதல் ஆலோசகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநரும், 1990 தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான டி.வி.ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.