8th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
3 புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்ய நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் குழு அமைப்பு - முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு
- இந்தியாவில் மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. 1860-ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
- 1973-ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
- 1872-ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களின் பல பிரிவுகளுக்கு வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த மூன்று சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்க்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
- இந்தச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல்-3-இல் இடம்பெறுவதால், மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
- ஆனால், அப்படி ஏதும் நடக்காமல், மாநிலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படாமல் இச்சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- இந்நிலையில், மத்திய அரசு அமல்படுத்தி உள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
- இந்த சட்டங்களில் மாநில அளவில் என்னென்ன திருத்தங்கள் கொண்டு வரலாம் என இந்த குழு ஆராய்ந்து ஒரு மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ஆனந்த் திருமணச் சட்டத்தின் கீழ் சீக்கியர்களின் திருமணங்களை அமல்படுத்துவது, பதிவு செய்வது குறித்து விவாதிக்க தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் தலைமையில் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் காணொலி கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
- ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இரண்டு மாத காலத்திற்குள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளன.