26th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சூரிய மின் உற்பத்தியில் தமிழ்நாடு சாதனை
- சூரிய மின் உற்பத்தியில் 5,512 மெகாவாட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது தமிழ்நாடு. நேற்று முன்தினம் (24.07.2024) 5,512 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு, மார்ச் 5 அன்று எட்டப்பட்ட 5,398 மெகாவாட்டை தாண்டியது தமிழ்நாடு.
- 2023 செப்.10-ல் 5,838 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தியை எட்டிய நிலையில், தற்போது சூரிய ஒளி உற்பத்தியில் புதிய சாதனை படைத்துள்ளது.
- அசாம் மாநிலத்தின் சராய்தேவ் பகுதியை பண்டைக்காலத்தில் ஆட்சி செய்த அஹோம் வம்சாவளி மன்னர் குடும்பத்தினரின் உடல் அடக்கம் செய்யப்படும் இடங்கள், மைதாம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தலங்கள் தற்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- புதுதில்லியில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய குழுவின் 46-வது கூட்டத்தில், இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
- இது இந்தியாவிலிருந்து யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ள 43-வது தலமாகும். அத்துடன் காசிரங்கா தேசிய பூங்கா, மனாஸ் வன உயிரியல் சரணாலயத்திற்கு பிறகு, அசாமில் இருந்து இடம்பெற்றுள்ள 3-வது பாரம்பரிய தலமாகும்.
- கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவிலிருந்து 13 பாரம்பரிய தலங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அதிக அளவில் உலக பாரம்பரிய தலங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா உலக அளவில் 6-வது இடத்தில் உள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ், பேரிடர் அபாயத் தணிப்பு துறையில் இந்தியா உலகளாவிய மற்றும் பிராந்திய தலைமைப் பங்கை வகித்து வருகிறது.
- இந்தத் திசையில் இந்தியா பல உலகளாவிய முன்முயற்சிகளை எடுத்துள்ளது, குறிப்பாக பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான சர்வதேச கூட்டணியை உருவாக்குவதில் முனைப்புடன் உள்ளது.
- இந்திய அரசின் பிரதிநிதியாக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர், திரு ராஜேந்திர சிங், 2024-25 ஆம் ஆண்டிற்கான ஆசிய பேரிடர் தயார்நிலை மையத்தின் தலைவராக 25 ஜூலை 2024 வியாழக்கிழமை தாய்லாந்தின் பாங்காக்கில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
- ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் பேரழிவு அபாய தணிப்பு மற்றும் பருவநிலை பின்னடைவை உருவாக்குவதில் ஒத்துழைப்பை செயல்படுத்துவதற்கான ஒரு தன்னாட்சி சர்வதேச அமைப்பாகும்.
- இந்தியா, பங்களாதேஷ், கம்போடியா, சீனா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு அண்டை நாடுகள் இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக உள்ளன.
- தாய்லாந்தின் பாங்காக்கில் 25ஜூலை2024 அன்று நடைபெற்ற ஆகிய பேரிடர் தயார் நிலை மையத்தின் 5 வது அறங்காவலர் குழு கூட்டத்திற்கும் இந்தியா தலைமை தாங்கியது.
- இந்தியாவிலிருந்து புராதானப் பொருட்கள், அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க வகை செய்யும் ஒப்பந்தத்தில், இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
- புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 46-வது உலக பாரம்பரிய குழுவின் கூட்டத்திற்கு இடையே, இன்று (26.07.2024) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில், மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு எரிக் கேர்செட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- யுனெஸ்கோவின் 1970-ம் ஆண்டு உடன்படிக்கைக்கு ஏற்ப, கலாச்சார உடைமைகள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.