குழந்தை திருமணங்கள் குறித்த இந்திய குழந்தை பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் அறிக்கை 2024 / REPORT OF THE INDIAN CHILD PROTECTION STUDY GROUP ON CHILD MARRIAGE 2024
TNPSCSHOUTERSJuly 26, 2024
0
குழந்தை திருமணங்கள் குறித்த இந்திய குழந்தை பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் அறிக்கை 2024 / REPORT OF THE INDIAN CHILD PROTECTION STUDY GROUP ON CHILD MARRIAGE 2024: கடந்த 2023-24-ஆம் ஆண்டு சட்டரீதியான உதவிகள் மூலம், 265 மாவட்டங்களில் 14,137 குழந்தை திருமணங்களையும், ஊராட்சிகளின் உதவி மூலம் 59,364 குழந்தை திருமணங்களையும் 161 சமூக அமைப்புகள் தடுத்து நிறுத்தின.
நாட்டில் ஒருநாளில் 4,442 பெண் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 3,863 குழந்தை திருமண வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு கட்டாய திருமணத்துக்கு 11,236 சிறுமிகள் கடத்தப்பட்டனா். இது 2022-ஆம் ஆண்டு 13,981-ஆக அதிகரித்துள்ளது. 2020 முதல் 2022 வரையிலான காலத்தில் கட்டாய திருமணத்துக்கு சிறுமிகள் கடத்தப்பட்டது 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-22 முதல் 2023-24-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் குழந்தை திருமண சம்பவங்கள் 81 சதவீதம் குறைந்தன.
சில பரிந்துரைகள்
குழந்தை திருமணங்கள் குறித்த இந்திய குழந்தை பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் அறிக்கை 2024 / REPORT OF THE INDIAN CHILD PROTECTION STUDY GROUP ON CHILD MARRIAGE 2024: குழந்தை திருமணங்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்தல், அந்தத் திருமணங்களுக்கு காரணமானவா்களைக் கைது செய்தல் போன்ற சட்டரீதியான நடவடிக்கைகளால், இந்தத் திருமணங்களை திறம்பட தடுக்க முடியும் என்று ஆய்வில் பலா் தெரிவித்துள்ளனா்.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு நிகராக குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமிகளையும் கருதி, அவா்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் செய்துவைக்கப்பட்ட திருமண உறவை துண்டித்துக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு சிறப்புத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும். அந்தத் திட்டம் அத்தகைய பெண்களின் திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மீது கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை திருமணங்கள் குறித்து புகாா் அளிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வகையில், பிரத்யேக வலைதளத்தை அறிமுகம் செய்யவேண்டும். புகாா் அளித்தால் அதிவிரைவாக நடவடிக்கை மேற்கொள்ளும் நடைமுறை கொண்டதாக அந்த வலைதளம் இருக்க வேண்டும்.
ENGLISH
REPORT OF THE INDIAN CHILD PROTECTION STUDY GROUP ON CHILD MARRIAGE 2024: In the last year 2023-24, 161 social organizations stopped 14,137 child marriages in 265 districts through legal assistance and 59,364 child marriages with the help of panchayats.
4,442 girl child marriages take place every day in the country. Compared to this number, only 3,863 cases of child marriage have been registered in the last 5 years.
In 2020, 11,236 girls were kidnapped for forced marriage. This has increased to 13,981 in 2022. Between 2020 and 2022, the number of girls trafficked into forced marriage increased by 24 percent.
During the period 2021-22 to 2023-24, the incidence of child marriage decreased by 81 per cent.
Some suggestions
REPORT OF THE INDIAN CHILD PROTECTION STUDY GROUP ON CHILD MARRIAGE 2024: According to the study, legal measures such as registering cases of child marriages and arresting those responsible for these marriages can effectively prevent these marriages.
Similar to the girls who suffer from sexual harassment, the girls who suffer from child marriage should also be considered and steps should be taken for their rehabilitation.
A special scheme should be introduced for women who want to end their childhood marriage. The program should focus on capacity building and economic stability of such women.
A dedicated website should be introduced under the Ministry of Home Affairs to report child marriages. The website should have a procedure to take quick action in case of complaint.