Type Here to Get Search Results !

25th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


25th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான பெயர் மாற்றம்
  • குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசுத் தலைவரின் அலுவலகமாகவும், வசிப்பிடமாகவும், தேசத்தின் சின்னமாகவும், மக்களின் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகவும் உள்ளது. 
  • அதை மக்கள் அணுகுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகை இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். 
  • அதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையின் முக்கியமான இரண்டு அரங்குகளான 'தர்பார் ஹால்' மற்றும் 'அசோக் ஹால்' ஆகியவற்றை முறையே 'கணதந்திர மண்டபம்' மற்றும் 'அசோக் மண்டபம்' என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மருபெயரிட்டார்.
5000 கிமீ தூரம் வரையில் துல்லியமாக இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை வெற்றி
  • 5000 கிமீ தூரம் வரையில் இலக்கை துல்லியமாக நிர்ணயித்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையானது நேற்று (ஜூலை 24) ஒடிசா மாநிலம் சந்திப்பூர் LC-IV மூலம் மாலை 4.20 மணிக்கு ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
  • இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. நீண்ட தூரம் செயல்படும் சென்சார்கள், குறைந்த நேரத்தில் தொடர்புகொள்ளும் அளவுக்கு கம்யூனிகேஷன் சிஸ்டம், வேறு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் ஆகிய வசதிகளை கொண்ட முழுமையான நெட்வொர்க்-மையப்படுத்தப்பட்ட போர் ஆயுதமாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் பாலிஸ்டிக் ஏவுகணை பற்றி தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையை நிலத்திலும், நீரிலும் நிலைநிறுத்தி இலக்குகளை தாக்க முடியும்.
கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
  • கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. 
  • இந்த வழக்கில் இன்று (ஜூலை 25) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினார்கள். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
  • தீர்ப்பை இன்று காலை வாசித்த தலைமை நீதிபதி சந்திரசூட், 'சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை. 
  • அரசியலமைப்பின் 246-வது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங்களே சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெறுகின்றன. கனிம வளம் கொண்ட நிலங்கள் 'நிலங்கள்' என்ற விளக்கத்துக்குள் அடங்கும்.
  • சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி அல்ல. அது குத்தகை பணம்தான்' என தெரிவித்தார்.
  • நீதிபதி நாகரத்னா வழங்கிய தீர்ப்பில், 'சுரங்கங்கள் மற்றும் கனிமங்களைக் கொண்ட நிலங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை இல்லை' என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel