தமிழ்ப் புதல்வன் திட்டம் / TAMIL PUTHALVAN THITTAM
TNPSCSHOUTERSJuly 25, 2024
0
தமிழ்ப் புதல்வன் திட்டம் / TAMIL PUTHALVAN THITTAM: 2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தமிழக பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் பல முக்கிய திட்டங்களில், தமிழ்ப் புதல்வன் திட்டம் முக்கியமானதாகும்.
அதாவது, உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தைப் போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்க தமிழ்ப் புதல்வன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இதன் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயிர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி கல்வியை மேருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். இதற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
2024-2025ம் நிதியாண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு "புதுமைப் பெண் திட்டம்" போன்று மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகை வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்ப் புதல்வன் திட்டம் / TAMIL PUTHALVAN THITTAM: தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயனடைவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னரும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
வருமான உச்ச வரம்பு இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும்.
மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள் .
தமிழ்நாடு அரசு தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.
பிற மாநிலங்களில் மத்திய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT. IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்.
தமிழ்ப் புதல்வன்" திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் அனைவரும் ஊக்கத்தொகையைப் பெற இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக தகவல் முகமையினை (Portal) அவர்கள் உயர்கல்வியைத் தொடரும் கல்வி நிறுவனம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
அரசுக்கும், மாணவர்களுக்கும் இடையே இடைத்தரகர்களை களைவதற்கும் ஊக்கத்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கும் இந்த இணையதளம் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ.401 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்ப் புதல்வன் திட்டம் / TAMIL PUTHALVAN THITTAM: தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ரூ 401 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும், தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ENGLISH
TAMIL PUTHALVAN THITTAM: The Tamil Nadu financial report for the financial year 2023-24 was tabled in the Tamil Nadu Assembly today. Among the many important schemes announced in this budget, the Tamil Puthalvan scheme is an important one.
In other words, Tamil Puthalvan will be introduced to make the students who studied in government schools into achievers, like the Innovation Girl Scheme which was introduced to increase the enrollment of women in higher education.
Under this, Rs.1000 per month will be directly paid into the bank account of students studying in government schools from class 6 to 12 to help them improve their education by purchasing textbooks, general knowledge books and magazines.
About three lakh college students will benefit from this scheme. He has announced that a fund of Rs.360 crore has been allocated for this. The Government of Tamil Nadu has issued an order to implement the "Tamil Puthalvan Scheme" which will provide a monthly grant of Rs. 1000.
Guidelines for the Tamil Puthalvan Project
TAMIL PUTHALVAN THITTAM: Provision will be made to apply online for students who have studied in government schools from 6th to 12th standard in Tamil Nadu and have studied in Tamil medium in government aided schools. Also, the incentive amount will be sent to the student's registered mobile number even after transfer to their bank account.
Students who have studied in government schools and government aided schools in Tamil medium without any discrimination of income ceiling caste and reservation, must be a student of higher education in any educational institution in Tamil Nadu.
Also, the institution and course the student is studying in should be recognized by the government. Students studying up to Class 8 or Class 9 or Class 10 in Government Schools and Government Aided Schools in Tamil medium are also eligible to benefit from this scheme.
Tamil Nadu Government students pursuing higher education through distance / postal mode and non-recognized educational institutes are not eligible for the incentive under this scheme.
IITs, NITs operating under central government in other states. Students who have studied in government schools and Tamil medium education in government aided schools will also benefit from this scheme. They can be approached through State Project Management Unit.
All those who are applying for the "Tamil Puthalvan" scheme can directly apply through the educational institution where they pursue their higher education through the special information agency (Portal) created for this scheme to get the incentive.
The website should be developed with utmost care to remove the middlemen between the government and the students and direct payment of incentives to the student's bank account.
Rs.401 crore allocation for Tamil Putulavan project
TAMIL PUTHALVAN THITTAM: The Tamil Nadu government has announced an allocation of Rs 401 crore for the Tamil Puthalvan project.
Further, the Tamil Nadu Government has issued an ordinance to set up a state level committee and a state level supervisory committee to implement the Tamil Puthalvan scheme.