24th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மருங்கூர் அகழாய்வில் செம்பினாலான அஞ்சனக்கோல் கண்டெடுப்பு
- கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
- கண்களுக்கு மைத்தீட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் 127 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சனக்கோல் 4.7செ.மீ நீளமும் 3.6 கிராம் எடையும் கொண்டுள்ளதாக உள்ளது.
- புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், 2 சூதுபவள மணிகளும், அக்கேட் வகை மணி ஒன்றும் இன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நாட்டில் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகள் குறித்து விவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை அளித்துள்ளது.
- 2018-ம் ஆண்டில் 1,57,593 பேரும், 2019-ம் ஆண்டில் 1,58,984 பேரும், 2020-ம் ஆண்டில் 1,38,383 பேரும், 2021-ம் ஆண்டில் 1,53,972 பேரும், 2022-ம் ஆண்டில் 1,68,491 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
- 2022-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதால், உயிரிழந்தவர்களின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 1,19,904 பேர் உயிரிழந்தனர்.
- ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 4,201 பேரும், தவறான பாதைகளில் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் 9,094 பேரும், சிவப்பு விளக்கு எல்லையைத் தாண்டியதால் ஏற்பட்ட விபத்தில் 1,462 பேரும், மொபைல் போன் பேசிக்கொண்டே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 3,395 பேரும், மற்ற காரணங்களால் 30,435 பேரும் உயிரிழந்தனர்.
- இந்திய கடற்படைக்காக கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தின் (ஜி.எஸ்.எல்) கட்டுமானத்தில் உள்ள இரண்டு மேம்பட்ட போர்க் கப்பல்களில் முதலாவது கப்பல், கோவாவில் தொடங்கப்பட்டது.
- கடல்சார் பாரம்பரியத்திற்கு இணங்க, கோவா ஆளுநர் திரு பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில், அதர்வ வேதத்திலிருந்து பிரார்த்தனைக்கு திருமதி ரீட்டா ஸ்ரீதரனால் கப்பல் இயக்கி வைக்கப்பட்டது.
- இந்திய கடற்படையின் வெல்ல முடியாத உணர்வையும், தொலைதூர மற்றும் ஆழமான தாக்கும் திறனையும் பிரதிபலிக்கும் வலிமைமிக்க அம்பின் நினைவாக இந்த கப்பலுக்கு திரிபுட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இரண்டு திரிபுட் நவீன போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம், கோவா ஷிப்யார்ட் நிறுவனத்திற்கு இடையே 2019 ஜனவரி 25 அன்று கையெழுத்தானது.
- இந்தக் கப்பல் எதிரிகளின் மேற்பரப்பு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- திரிபுட் வகை கப்பல்கள் 124.8 மீ நீளமும் 15.2 மீ அகலமும் கொண்டவை. அவற்றின் இடப்பெயர்ச்சி தோராயமாக 3600 டன் ஆகும். வேகம் அதிகபட்சமாக 28 கடல் மைல்கள்.
- இந்தக் கப்பல்களில் மேம்பட்ட ரகசிய அம்சங்கள், நவீன ஆயுதங்கள், சென்சார்கள், இயங்குதள மேலாண்மை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
- கோவாவில் கட்டப்படும் திரிபுட் வகை கப்பல்கள் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட டெக் மற்றும் தல்வார் வகை கப்பல்களை மாதிரியாக கொண்டுள்ளன. இந்தப் போர்க்கப்பல்கள் முதன்முறையாக இந்திய கப்பல் கட்டும் தளத்தால் உள்நாட்டிலேயே கட்டப்படுகின்றன.
- புதிய தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்தியத் தொலைத்தொடர்புத் துறைக்கு உட்பட்ட முன்னணி தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேட்டிக்ஸ் வளர்ச்சி மையம் (சி-டாட்), ‘செல் இல்லாத’ 6-ஜி அணுகு மையங்களை உருவாக்குவதற்காக, இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ரூர்க்கி மற்றும் மாண்டியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இவ்விரு ஐஐடி-க்களும் இணைந்து இந்தப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளன.
- இந்த ஒப்பந்தம், மத்தியத் தொலைத்தொடர்புத் துறையின், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி நிதியத்தின் கீழ், கையெழுத்தாகியுள்ளது.
- இந்த நிதியம், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள், இந்திய புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தொழில்நுட்ப வடிவமைப்பு, உருவாக்கம், தொலைத்தொடர்பு சாதனங்களை வணிகமயமாக்குவதற்கான ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.