
14th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கீழடியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில், 10ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ல் தொடங்கியது. இதுவரை இரு குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில் பாசிகள், கண்ணாடி மணிகள், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பதிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
- தற்போது யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டக்காயின் மேற்பகுதி, 1.3 செ.மீ., விட்டமும், கீழ்பகுதி, 1.5 செ.மீ., விட்டமும், 1.3 செ.மீ., உயரமும் கொண்டதாக உள்ளது.
- தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்த அகழாய்வில் இதுவரை ஐந்து ஆட்டக்காய்கள் பல்வேறு கட்ட அகழாய்வில் கிடைத்துள்ளன. ஆட்டக்காய்கள் அனைத்துமே யானை தந்தத்தால் ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளன.
- இவை அனைத்தும் ஒரே கால கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. ஆட்டக்காயின் காலத்தை அறிய கார்பன் டேட்டிங் முறையை பயன்படுத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
- கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மருங்கூர் ஏரிக்கரை பகுதியில், ஜூன் 18ம் தேதி முதல் அகழாய்வு துவங்கி நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குனர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பொறுப்பாளர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
- அகழாய்வில் முதலில் ராசராசன் கால செம்பு காசு, சுடுமண்ணால் ஆன வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று கிடைத்துள்ளது.
- உருளை வடிவலான இக்கண்ணாடி மணி 12.5 மி.மீ., நீளம், 8 மி.மீ., விட்டம் 0.45 கிராம் எடை கொண்டது.
- விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியுடன் (28 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதிய பார்போரா (28 வயது, 32வது ரேங்க்) 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 1 மணி, 56 நிமிடம் போராடி வென்றார்.
- இது அவர் வென்ற 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக, 2021ல் பிரெஞ்ச் ஓபனில் பார்போரா கோப்பையை கைப்பற்றி இருந்தார். ஜாஸ்மின், பார்போரா இருவரும் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.