13th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ரூ.29,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சாலை, ரயில்வே, துறைமுகங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாலை (13.07.2024) அடிக்கல் நாட்டினார். நிறைவடைந்த திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- 16,600 கோடி ரூபாய் மதிப்பிலான தானே- போரிவலி சுரங்கப்பாதை திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- கோரேகான் – முலுண்ட் இணைப்புச் சாலையில் 6,300 கோடி ரூபாய் மதிப்பிலான சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- நவி மும்பையில் உள்ள டர்பேயில் கல்யாண் யார்டு மறுவடிவமைப்பு விரைவுச் சக்தி பன்னோக்கு சரக்கு முனையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- சுமார் 5600 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இளைஞர்களுக்கான (முக்கிய மந்திரி யுவ காரிய பிரசிக்ஷன்) திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சகம் கடல் முகத்துவாரத்தில் தூர்வாரப்படும்போது கிடைக்கும் மணல்களை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- ரூ.46,47,380/- மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி பம்பாய்) மூன்று ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்.
- தூர்வாரப்பட்ட மணலை பல்வேறு கட்டுமானங்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதே இந்த ஆராய்ச்சியின் முதன்மை நோக்கம் ஆகும்.
- இந்த புதுமையான அணுகுமுறை பொதுவாக கழிவுகளாகக் காணப்படும் தூர்வாரப்பட்ட மணலை மதிப்புமிக்க வளமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நிலையான வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பங்களிக்கும்.
- உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால், அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
- கடந்த ஓராண்டில் குறைந்த அளவாக சில்லறை பணவீக்கம் கடந்த மே மாதம் 4.75 சதவிகிதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம் 5.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
- ஊரகப் பகுதிகளில் 5.66 சதவிகிதமாகவும், நகர்ப்புறப் பகுதிகளில் 4.39 சதவிகிதமகவும் அதிகரித்துள்ளது. உணவு பொருள்களின் பணவீக்கம் 9.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும். ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் இருந்து ராணுவத்தை திரும்ப பெற வேண்டும்.ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை உக்ரைனுக்கு கொடுக்க வேண்டும்.
- மேலும் முக்கியமான மின் நிலையங்களின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரும் வரைவு தீர்மானத்தை ஐநாவில் உக்ரைன் அறிமுகப்படுத்தியது.
- இதன் மீது நடந்த வாக்கெடுப்பில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா, பெலாரஸ், கியூபா, வடகொரியா, சிரியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
- இந்தியா, சீனா, வங்கதேசம், பூடான், எகிப்து, நேபாளம், பாகிஸ்தான், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உட்பட 60 நாடுகள் புறக்கணித்தன.