9th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி
- நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
- தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
- பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- தற்போது நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய அமைச்சராக அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- ஸ்விட்சர்லாந்து நாட்டின் நோட்வில் பகுதியில் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி ஜூன் 9ஆம் தேதி (இன்றுடன்) முடிகிறது.
- இப்போட்டியில், ஹிமாசலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் ரூபா காயா பகுதியைச் சேர்ந்தவர் செளரப் சர்மா இப்போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
- 155 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.