6th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6வது கட்டப் பேச்சு
- இந்தியா – ஓமன் இடையே கடற்பகுதியில் தற்போதுள்ள ராணுவத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய கடற்படை – ஓமன் ராயல் கடற்படை இடையேயான 6-வது கட்ட பேச்சுக்கள் புதுதில்லியில் 2024 ஜூன் 4, மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றது.
- ஓமன் கடற்படை சார்பில் கமாண்டர் ஜெசிம் முகமது அலி அல் பலூசியும் இந்திய கடற்படை சார்பில் கமாண்டர் மன்மீத் சிங் குரானா ஆகியோர் இப்பேச்சுக்களுக்குத் தலைமை வகித்தனர்.
- கடல்சார் பாதுகாப்பு சவால்கள் குறித்து இப்பேச்சுக்களில் விவாதிக்கப்பட்டது. ஒருங்கிணைந்து செயல்படுத்தல், தகவல் பரிமாற்றம், கடல்சார் பகுதி விழிப்புணர்வு, பயிற்சி, வானியல், தொழில்நுட்ப உதவி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
- ஓமன் கடற்படைக் குழு இந்திய கடற்படையின் குழுத் துணைத்தலைவர், வைஸ் அட்மிரல், தருண் சோப்தியை சந்தித்து பேசினர். வளைகுடா பகுதியில் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக ஓமன் திகழ்கிறது.
- கடற்படை ஒத்துழைப்புத் தொடர்பாக இருநாட்டு கடற்படை இடையேயான பேச்சுக்கள் வழக்கமாக நடைபெறுகிறது.
- சிங்கப்பூரில் 2024, ஜூன் 6 அன்று நடைபெற்ற இந்தோ – பசிபிக் வளமையான பொருளாதார கட்டமைப்புக்கான அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளர் சுனில் பர்துவால் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு பங்கேற்றது.
- இந்திய பசிபிக் பொருளாதார கட்டமைப்பு அமைச்சர்கள் நிலயைிலான அறிக்கையை 2023 நவம்பர் 14 அன்று வெளியிட்டது. தூய்மைப் பொருளாதாரம், நியாயமான பொருளாதாரம் மற்றும் செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் மேலான ஒப்பந்தம் ஆகியவற்றிற்கான பேச்சுவார்த்தைகளின் மேம்பட்ட முடிவை அறிவித்தது.
- அதற்கேற்ப, இந்தோ – பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் கூட்டாளர்கள் இந்த ஒப்பந்தங்கள் மற்றும் உள்நாட்டு ஒப்புதல் செயல்முறைகளுக்கான உரையின் சட்டப்பூர்வ மதிப்பாய்வை நிறைவு செய்தனர். இந்த ஒப்பந்தங்களில் இன்று இந்தோ – பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
- இந்தியா - கத்தார் இடையேயான முதலீடு குறித்த கூட்டுப் பணிக்குழுவின் முதல் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.
- மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் திரு அஜய் சேத் மற்றும் கத்தார் அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் முகமது பின் ஹாசன் அல் மல்கி ஆகியோர் கூட்டு பணிக்குழுவுக்கு இணைத் தலைமை வகித்தனர்.
- பரஸ்பர வளர்ச்சி, செழுமையை வளர்க்கும் உணர்வுடன், முதலீட்டுக்கான கூட்டுப் பணிக்குழு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், விரைவான வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி முதல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு வரையிலான பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான கூட்டுத் திறனை மேம்படுத்தவும் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
- இந்தியா மற்றும் கத்தார் இடையேயான வலுவான பொருளாதார உறவின் முக்கியத்துவத்தை கூட்டுத் தொழில்நுட்பப் பணிக்குழு சுட்டிக்காட்டியது.
- இது பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புகள், பொதுவான நோக்கங்கள் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பகிரப்பட்ட தொலைநோக்கு ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றி உள்ளது.